இவர்கள்தான் மதுக்கடையை திறக்கக் கோரி மறியல் செய்த 'மகான்கள்'...!
தேனி: தேனி மாவட்டம் வருசநாடு அருகே மதுக் கடையைக் திறக்கக் கோரி ஆண்கள் போராட்டம் நடத்தியதன் எதிரொலியாக அதுகுறித்து நாளை ஊர் மக்களுடன் போலீஸார் பேச்சு வார்த்தை நடத்தவுள்ளனர்.
தேனி மாவட்டம் வருசநாடு அருகே-மூலக்கடை கிராமத்தில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அரசு மதுபானக்கடை திறக்கப்பட்டது. இக்கடையை அடைக்கவேண்டும் என கூறி பெண்கள் கடந்த வாரம் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து காவல்துறையினர் கடையை பூட்டி பெண்களிடம் சாவியை ஒப்படைத்தனர். இதனால் ஊரில் உள்ள குடிகார ஆண்கள் கொந்தளித்தனர்.

மூடப்பட்ட மதுபானக்கடையை திறக்கவலியுறுத்தி நேற்று ஆண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீஸார் சமாதானப்படுத்தி கலைந்து போகச் செய்தனர்.
இந்த நிலையில், இந்த பிரச்சனை தொடர்பாக நாளை தீர்வு காண போலீஸார் முடிவு செய்துள்ளனர். இதற்காக ஊர் ஆண்களையும், பெண்களையும் காவல்நிலையத்திற்கு பேச்சு வார்த்தைக்கு அழைத்துள்ளனர்.
பார்க்கலாம்.. வெல்லப் போவது பெண்களா இல்லை குடிகாரர்களா என்று!
-
சென்னை டாஸ்மாக் கடையில் ‘ஏ.ஐ.’ மேஜிக்! குப்பையாகும் பாட்டில்களை கொடுத்தால் கொட்டும் சில்லறை! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு












Click it and Unblock the Notifications