சாதி கட்சியினருக்கு எதிர்ப்பு தெரிவித்து வீடுகளில் கருப்பு கொடி ஏற்றிய கிராமத்தினர்
கழுகுமலை: கழுகுமலை அருகே சாதி கட்சி நிர்வாகிகள் ஊருக்குள் வர எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை அருகே வேலாயுதபுரத்தில்இரண்டு சமூகத்தினர் இடையே மோதல் இருந்து வருகிறது.கடந்த ஏப்ரல் 12ம்தேதி ஒரு சமூகத்தை சேர்ந்த ஆடு மேய்க்கும் தொழிலாளி கருப்பாயி என்பவர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக மற்றொரு தரப்பை சேர்ந்த 13 பேரை போலீசார் கைது செய்தனர்.
உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தியும் , அப்பாவிகளை விடுதலை செய்ய கோரியும் வேலாயுதபுரம் கிராமத்தில் ஆதி தமிழர் பேரவை மற்றும் விடுதலை சிறுத்தைகள், சாதி கட்சியினர் ஊருக்குள் நுழைய எதிர்ப்பு தெரிவித்தும் ஒரு சமூகத்தினர் வீடுகள் மற்றும் தெருக்களில் கருப்பு கொடி ஏற்றினர். இதுகுறித்து ஒரு தரப்பை சேர்ந்த மக்கள் கூறுகையில், கருப்பசாமி என்பவர் கொலை தொடர்பாக அப்பாவிகள் 13 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
போலீசார் விசாரணை நடத்தி உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். எங்கள் ஊரில் சாதிய கட்சிகள் ஊடுருவுவதால் அமைதியின்மை ஏற்படுகிறது. இதனால் சாதி கட்சிகள் வேலாயுதபுரம் ஊருக்குள் நுழைய தடை விதிக்க வேண்டும். எங்கள் கோரிக்கைகளை ஏற்காவிட்டால் ரேசன் கார்டுகளை வாங்க மாட்டோம். மேலும் 100 நாள் வேலை திட்டத்திற்கும் செல்ல மாட்டோம் என்றனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சு வார்த்தை நடத்தினர். இதற்கிடையே கொலை சம்பவத்தை கண்டித்து கழுகுமலையில் ஆதி தமிழர் பேரவையினர் மற்றும விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்பாட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு போலீசார் அனுமதி மறுத்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் பதட்டம் ஏற்படாமல் இருக்க அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications