26 ஆண்டு முன்பு தவறான சிகிச்சை: உருக்குலைந்த உடம்புடன் உறுதியான மனதுடன் செஸ் ஆடும் வீரர்
அகமதாபாத்: வெறும் கை என்பது மூடத்தனம், விரல்கள் பத்தும் மூலதனம்' என்ற பழமொழியை மெய்யாக்கியிருக்கிறார் சைலேஷ்.
கடந்த 26 ஆண்டுகளாக படுக்கையை விட்டு எழுந்திருக்கக்கூட முடியாத நிலையில் இருக்கும் இவர் மனம் தளராமல் செஸ் விளையாடி வருவது முயற்சி மெய் வருத்தக் கூலி தரும் என்ற நம்பிக்கையில் தானே..
மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்தவரான சைலேஷ் நெர்லிகர் (32). செஸ் வீரர். ஆனால், மற்ற வீரர்களை போல இவரால் நாற்காலியில் உட்கார முடியாது. தலையை தூக்கக்கூட முடியாது. படுத்தபடியே செஸ் விளையாடுகிறார்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் தற்போது நடந்து வரும் சர்வதேச ரேட்டிங் செஸ் போட்டிக்கும் சைலேஷ் வந்திருந்தார். அம்மா சரளா அவரை தன் இடுப்பில் குழந்தை போல வைத்து தூக்கி வந்து படுக்க வைத்தார். பின்னர், சைலேஷ் விளையாட தொடங்கினார்.
அவரது உடல்நல பாதிப்பு குறித்து அம்மா சரளா கூறும்பொழுது...

ஆரோக்கியமாக இருந்த சைலேஷ்...
சைலேஷ் 6 வயது வரை ஆரோக்கியமாக இருந்தான். நன்கு ஓடியாடி விளையாடுவான். சைக்கிள் ஓட்டுவான், கிரிக்கெட், புட்பால் ஆடுவான்.

26 ஆண்டுகளாக படுத்த படுக்கை...
அவனுக்கு திடீரென மஞ்சள் காமாலை வந்தது. உடல் எடை படிப்படியாக குறைந்தது. கால்சியம் பற்றாக்குறை என்று கூறி டாக்டர்கள் மருந்து, மாத்திரை கொடுத்தனர். அதன் பிறகு கடந்த 26 ஆண்டுகளாக படுத்த படுக்கையாகத்தான் இருக்கிறான்.

அதிக கால்சியம் ஆபத்து...
அவனது உடலில் வெறும் எலும்பு மட்டும்தான் இருக்கிறது. சதை கொஞ்சம்தான் உள்ளது. கால்சியம் அதிகப்படியாக சேர்ந்து இப்படி ஆகிவிட்டதாக கூறுகிறார்கள்.

மூளையே மூலதனம்...
உடம்பே உருக்குலைந்து விட்டாலும் மூளையை மட்டுமே நம்பி செஸ் விளையாடி சாதித்து வருகிறான்' இவ்வாறு சரளா கூறினார்.

புளூராய்டு அபாயம்...
உடலில் அதிகப்படியாக புளோரைடு உப்பு சேர்வதால் ஏற்படும் ‘ஸ்கெலிடல் ப்ளூரோசிஸ்' என்ற பாதிப்பு இது எனவும், புளோரைடு உப்பு அதிகம் உள்ள தண்ணீரை தொடர்ந்து குடித்தால் இத்தகைய பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் டாக்டர்கள் கூறுகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications