வி.ஏ.ஓக்களுக்கு அலுவலகத்துடன் குடியிருப்புகள்: சட்டசபையில் முதல்வர் அறிவிப்பு

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண் 110-ன் கீழ் இன்று அறிக்கை வாசித்த ஜெயலலிதா கூறியதாவது: வருவாய்த் துறையின் சேவை மக்களை விரைந்து அடைய வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில், புதிய மாவட்டங்களை உருவாக்குதல், புதிய வட்டாட்சியர் அலுவலகங்களை உருவாக்குதல், ஒவ்வொரு கிராமத்திற்கும் தனியாக கிராம நிருவாக அலுவலர்களை நியமித்தல் போன்ற எண்ணற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் உள்ள வருவாய் வட்டங்களில், 4 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட வட்டங்களை பிரிக்க பரிந்துரை செய்யும் வகையில் அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழு 4 லட்சத்திற்கும் மேல் மக்கள் தொகை கொண்ட 62 வட்டங்களை கண்டறிந்து அவற்றில் 51 வட்டங்களை முதலில் பிரிக்க பரிந்துரை செய்துள்ளது. அதில் முதற்கட்டமாக மாநகரப் பகுதியில் உள்ள வட்டங்களை பிரிக்க முன்னுரிமை அளிக்கப்படும்.
சென்னையில் புதிய வட்டங்கள்
அதன்படி, இந்த நிதியாண்டில் சென்னை மாவட்டத்தில் உள்ள கோட்டை - தண்டையார்பேட்டை வட்டத்தினை பிரித்து புரசைவாக்கத்தில் ஒரு புதிய வட்டமும்; புரசைவாக்கம்-பெரம்பூர் வட்டத்தினை பிரித்து அயனாவரத்தில் ஒரு புதிய வட்டமும்; எழும்பூர்-நுங்கம்பாக்கம் வட்டத்தினை பிரித்து அமைந்தகரையில் ஒரு புதிய வட்டமும்; மைலாப்பூர்-திருவல்லிக்கேணி வட்டத்தினை பிரித்து வேளச்சேரியில் ஒரு புதிய வட்டமும்; மாம்பலம் -கிண்டி வட்டத்தினை பிரித்து கிண்டியில் ஒரு புதிய வட்டமும் உருவாக்கப்படும்.
திருவள்ளூர் மாவட்டம் மாதவரம் வட்டத்தினை பிரித்து திருவொற்றியூரில் ஒரு புதிய வட்டமும்; அம்பத்தூர் வட்டத்தினை பிரித்து மதுரவாயலில் ஒரு புதிய வட்டமும் உருவாக்கப்படும்.
திருப்பூர் மாவட்டம் திருப்பூர் வட்டத்தினை பிரித்து திருப்பூர் (தெற்கு) என்ற ஒரு புதிய வட்டமும்; அவினாசி வட்டத்தைப் பிரித்து ஊத்துக்குளியில் ஒரு புதிய வட்டமும்; திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருச்சிராப்பள்ளி வட்டத்தினை பிரித்து திருச்சிராப்பள்ளி (கிழக்கு) என்ற ஒரு புதிய வட்டமும்; மணப்பாறை வட்டத்தைப் பிரித்து மருங்காபுரியில் ஒரு புதிய வட்டமும் உருவாக்கப்படும்.
மதுரை மாவட்டம், மதுரை (தெற்கு) வட்டத்தினை பிரித்து திருப்பரங்குன்றம் மற்றும் மதுரை (மேற்கு) ஆகிய இரு புதிய வட்டங்களும்; மதுரை (வடக்கு) வட்டத்தினை பிரித்து மதுரை (கிழக்கு) என்ற புதிய வட்டமும் உருவாக்கப்படுகிறது.
கோயம்புத்தூர் மாவட்டம், கோயம்புத்தூர் (தெற்கு) வட்டத்தினை பிரித்து பேரூர் மற்றும் மதுக்கரை ஆகிய இரு புதிய வட்டங்களும்; சேலம் மாவட்டம், சேலம் வட்டத்தினை பிரித்து சேலம் (மேற்கு) மற்றும் சேலம் (தெற்கு) ஆகிய இரு புதிய வட்டங்களும் உருவாக்கப்படும்.
வேலூர் மாவட்டம், வேலூர் வட்டத்தினை பிரித்து அணைக்கட்டில் ஒரு புதிய வட்டமும்; திருப்பத்தூர் வட்டத்தை பிரித்து நாட்றாம்பள்ளியில் ஒரு புதிய வட்டமும்; கரூர் மாவட்டம், கரூர் வட்டத்தைப் பிரித்து மண் மங்கலத்தில் ஒரு புதிய வட்டமும்; விழுப்புரம் மாவட்டம், விழுப்புரம் வட்டத்தைப் பிரித்து, விக்ரவாண்டியில் ஒரு புதிய வட்டமும்; கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம் வட்டத்தைப் பிரித்து, வேப்பூரில் ஒரு புதிய வட்டமும்; தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் வட்டத்தைப் பிரித்து பூதலூரில் ஒரு புதிய வட்டமும்; திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் வட்டத்தைப் பிரித்து, திண்டுக்கல் (மேற்கு) என்ற புதிய வட்டமும் என மொத்தம் 25 புதிய வருவாய் வட்டங்கள் உருவாக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
34 வருவாய் வட்டங்கள்
கடந்த ஆண்டில் உருவாக்கப்பட்ட 9 புதிய வருவாய் வட்டங்கள் மற்றும் தற்போது உருவாக்கப்பட உள்ள 25 புதிய வருவாய் வட்டங்கள் ஆகியவற்றை சேர்த்து கடந்த இரண்டாண்டு காலத்தில் 34 புதிய வருவாய் வட்டங்கள் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அடிப்படை கட்டமைப்பு வசதிகள்
அதிக அளவு வருவாய் வட்டங்களை மட்டும் உருவாக்கினால் போதுமானதல்ல, அந்த வட்டாட்சியர் அலுவலகங்களுக்கு உரிய அடிப்படை கட்டமைப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு, கடலூர் மாவட்டத்தில் குறிஞ்சிப்பாடி, நாகப்பட்டினம் மாவட்டத்தில் குத்தாலம், திருவள்ளுர் மாவட்டத்தில் மாதவரம், திருப்பூர் மாவட்டத்தில் மடத்துக்குளம், காஞ்சிபுரம் மாவட்டத்தில் சோழிங்கநல்லூர் மற்றும் வேலூர் மாவட்டத்தில் ஆம்பூர் ஆகிய ஆறு வட்டாட்சியர் அலுவலகங்களுக்கு மொத்தம் 16 கோடியே 74 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சொந்தக் கட்டடங்கள் கட்டித் தரப்படும்.
இதே போன்று, நடப்பாண்டில் 20 வருவாய் ஆய்வாளர்களுக்கு குடியிருப்புடன் கூடிய அலுவலகக் கட்டடங்கள் தலா 14 லட்சத்து 16 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கிராம நிர்வாக அலுவலர்கள்
பொதுமக்கள் குறு வட்ட அளவர்களை எளிதாக தொடர்பு கொள்ள வசதியாக, மொத்தமுள்ள 1,136 குறு வட்டங்களில், 100 குறு வட்டங்களில் அலுவலகத்துடன் கூடிய குடியிருப்புகள் தலா 14 லட்சத்து 16 ஆயிரம் ரூபாய் செலவில் குறு வட்ட அளவர்களின் பயன்பாட்டிற்காக கட்டப்படும்.
இது மட்டுமல்லாமல், நடப்பாண்டில் 114 கிராம நிர்வாக அலுவலர்களுக்கு அலுவலகத்துடன் கூடிய குடியிருப்பு கட்டடங்கள் தலா 8 லட்சத்து 21 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டித் தரப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதற்கென 9 கோடியே 36 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
மேலும், 5,000 கிராம நிர்வாக அலுவலகக் கட்டடங்கள் 25 கோடி ரூபாய் செலவில் நடப்பாண்டில் புதுப்பிக்கப்படும்'' என்று தெரிவித்தார்.
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications