இலங்கை தமிழ் குழந்தைகள் நலனுக்காக 6 ஆயிரம் டாலர்கள் திரட்டிய அமெரிக்க குழந்தைகள்
டல்லாஸ்(யு.எஸ்): இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்டு, தாய் தந்தையர், உறவினர்களை இழந்து ஆதரவற்றவர்களாகிவிட்ட தமிழ்க் குழந்தைகள் நலனுக்காக, அமெரிக்க இந்தியக் குழந்தைகள் 6 ஆயிரம் டாலர்கள் நிதி திரட்டி சாதனை படைத்துள்ளார்கள்.
பாலவிகாஸ் பள்ளி
வடக்கு டல்லாஸ் சாய் பாலவிகாஸ் பள்ளியை நிறுவிய உமா ராவ் மற்றும் டாக்டர் சேஷகிரி ராவ், சுமார் பதினைந்து ஆண்டுகளாக நடத்தி வருகிறார்கள். ஐந்து வயது முதல் 15 வயது வரையிலுமான சுமார் 300 மாணவர்கள் இங்கு பயின்று வருகிறார்கள்.
இந்திய கலாச்சாரம், சமூக சிந்தனை, சமய கோட்பாடுகள் மற்றும் சேவை மனப்பான்மை போன்ற அடிப்படையில் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. அமெரிக்க வாழ்க்கை முறையில் தொலைந்து விடாமல், நமது அடையாளத்தை நிலை நிறுத்திக் கொள்ளவும், அதே வேளையில் அமெரிக்க வாழ்க்கைமுறையுடன் இணக்கமாக நடந்துகொள்ளவும் மாணவர்கள் தயார் ஆகிறார்கள்.

மாணவர்கள் நன்கொடைகள், நற்பணிகள் செய்வதை வாழ்க்கையின் ஒரு அங்கமாக மாற்றிக்கொள்ளவும் இது உதவியாக இருக்கிறது. மாணவர்களின் பங்களிப்போடு, வாரம்தோறும் அமெரிக்காவில் உள்ள ஏழைகள், வீடற்றவர்களுக்கு நாராயணா சேவை என்ற பெயரில் உணவுப் பொருட்களை வழங்கி வருகிறார்கள்.
இறுதி ஆண்டு மாணவர்கள் நடத்தும் நல உதவித் திட்டம் ஒவ்வொரு வருடமும், இறுதி ஆண்டு முடிக்கும் மாணவர்கள், நடைப் பயணம் (5 K Walk) திட்டம் மூலம் நிதி திரட்டி பல்வேறு நற்பணிகளுக்கு நன்கொடையாக கொடுத்து வருகிறார்கள்இந்த நடைப்பயணத்தில் கலந்து கொள்பவர்களிடம் பதிவுத் தொகை, நன்கொடைகள் என நிதி திரட்டி சமூகப் பணிகளுக்கு அளித்து வருகிறார்கள்.
இந்த திட்டவடிவம், செயலாக்கம் என அனைத்து பணிகளையும், மாணவர்களே திட்டமிட்டு செயல்படுத்துகிறார்கள். இதன் மூலம் அவர்களுக்கு லீடர்ஷிப் பயிற்சியும் கிடைக்கிறது. பல்வேறு நலத் திட்டங்களுக்கு உதவியாகவும் அமைகிறது. இந்த ஆண்டு பள்ளியை முடித்துச் செல்லும் மாணவர்கள் இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவி செய்ய விரும்பினர்.
கிளிநொச்சியில் உள்ள மகாதேவா ஆசிரமத்தின் குழந்தைகள் காப்பகத்தில் உள்ள ஆதரவற்ற குழந்தைகளுக்கா நிதி திரட்ட முடிவு செய்தனர். சுமார் 60 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் இந்த காப்பகத்தில் தற்போது 147 ஆண் 179 பெண் குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அனைவரும் 2009 போரின் போது பெற்றோர், உறவினர்களை இழந்தவர்கள். போர் முனையின் கோரக்காட்சிகளை பார்த்து இன்னும் அந்த பாதிப்பு நீங்காமல் இருப்பவர்கள். சிலர் குண்டு வீச்சின் போது உடலில் நுழைந்த துகள்களை உடம்பில் சுமந்து கொண்டிருப்பவர்கள்.
இந்த குழந்தைகளின் நலனுக்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை ட்ல்லாஸ் ப்ளேனோ ரஸல் க்ரீக் பார்க்கில் நடைப் பயணம் மூலம் 6 ஆயிரம் டாலர்களை திரட்டி பாலவிகாஸ் மாணவர்கள், பள்ளி வ்ரலாற்றிலேயே ஒரு புதிய சாதனை படைத்துள்ளார்கள்.

500 பேர் 6 ஆயிரம் டாலர்கள்
மாணவர்களின் நல்ல நோக்கத்தை அறிந்து கொண்ட டல்லாஸ் தமிழர்கள் சுமார் 500 பேர் குடும்பத்தோடு இந்த திட்டத்தில் கலந்து கொண்டனர். நுழைவுக் கட்டணம், நன்கொடை, உணவு ஏற்பாடு என பலவகையிலும் அவர்களின் பங்களிப்பு இருந்தது.
3 வயது குழந்தைகள் முதல், ஊரிலிருந்து பிள்ளைகளை பார்க்க வந்திருக்கும் வயதான தாத்தா பாட்டிகள் வரை கலந்து கொண்டு ஆதரவளித்தது நெகிழ்ச்சியாக இருந்தது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை வேலுவின் வழிகாட்டுதல்களுடன், மாணவர்கள் அக்ஷய், சுவேதா, தர்ஷன் மற்றும் சுஷ்மிதா செய்திருந்தனர். அவர்களுக்கு உறுதுணையாக ஏனைய மாணவர்கள் ஒருங்கிணைப்பு பணிகளில் உதவியாக இருந்தனர். வருகை தந்த அனைவருக்கும் அறுசுவை மதிய உணவு இலவசமாக வழஙகப்பட்டது.
அமெரிக்காவில் பிறந்த குழந்தைகளுக்கு, தாய் தந்தையரின் பிறந்த ஊர் பற்றி கூட தெரிந்திருக்காது என்ற பொதுவான கருத்து நிலவும் வேளையில், இலங்கையில் போரினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளையும், அதனால் ஆதரவற்றவர்களாகியிருக்கும் குழந்தைகள் பற்றியும் நன்றாக அறிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
இந்தியா சமத்து பிள்ளையாக.. சொன்னதை கேட்கிறது.. சீண்டிய அமெரிக்க அதிபர் மாளிகை.. நிலைமை மோசமாகுது! -
'அவசர' ஆலோசனை.. ஹோட்டல்களைக் காப்பாற்றுமா தமிழக அரசு? நேரடியாக களத்தில் இறங்கிய முதல்வர்! -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
ஹார்முஸ் ஜலசந்தி.. உலகையே உலுக்கும் 'கடல் கண்ணிவெடிகள்'.. கழுத்தை நெரிக்கும் ஈரான்.. டிரம்ப் ஷாக்! -
காலியான வீதிகள்.. விழி பிதுங்கும் தொழிலதிபர்கள்.. ஆள் இல்லாத "அமீரகம்".. கோஸ்ட் டவுன் துபாய்! -
கச்சா எண்ணெய் தோண்டிய படுகுழி.. காலில் கோடாரியை போட்ட டிரம்ப்.. அமெரிக்க டாலர் சாம்ராஜ்ஜியம் ஓவர்! -
உலகையே திரும்பி பார்க்க வைத்த.. 'மிஸ்டரி' போன் கால்.. புடினிடம் போனை போட்ட கெஞ்சிய டிரம்ப்? -
LPG சிலிண்டர் தட்டுப்பாடு டீசர்தான்.. மெயின் பிரச்சனையே இனிதான்.. கவனமா இருங்க.. வரப்போகும் சிக்கல் -
ஈரான் போருக்கும்.. LPG சிலிண்டருக்கும் என்ன தொடர்பு? எப்படி தட்டுப்பாடு வந்தது? சிக்கலின் ஆதி புள்ளி -
LPG சிலிண்டர் தட்டுப்பாடு.. சென்னையில் நிலைமை எப்படி இருக்கு? ஹோட்டல்கள் மூடப்படுமா? பின்னணி -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான்












Click it and Unblock the Notifications