தமிழ் தாய்க்கு சிலை... ஆங்கிலப் பாட மொழி... ஏன் இந்த முரண்பாடு?- கருணாநிதி
Subscribe to Oneindia Tamil

தி.மு.க. தலைவர் கருணாநிதி சென்னை கோபாலபுரத்திலுள்ள தனது இல்லத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது கருணாநிதி கூறியதாவது, ‘தமிழ்த் தாய் சிலைக்கு 100 கோடி ரூபாய் என்று அறிவித்திருக்கிறார்கள். ஆனால் தாய் மொழி எல்லா நாடுகளிலும் பயிற்று மொழியாக ஆக்கப்படுகின்ற காலக் கட்டத்தில் தமிழ்நாட்டில் மாத்திரம் விதி விலக்காக அரசின் சார்பில் தமிழ் பாட மொழியாக இருக்க வேண்டிய அவசியமில்லை என்ற கருத்துப்பட ஆங்கிலக் கல்வியைப் புகுத்தப் போவதாக விளக்கம் அளித்திருக்கிறார்கள்.
தமிழ்த் தாய்க்கு சிலை வைப்பதும், ஆங்கிலத்தைப் பாட மொழியாக ஆக்க முயற்சிப்பதும் ஒன்றுக்கொன்று எவ்வளவு முரண்பாடானவை என்பதை நீங்களே புரிந்து கொள்ளலாம்' எனத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications