தமிழக ரயில் நிலையங்களில் தட்கல் டிக்கெட்டுக்கு இனி தனி வரிசை
சென்னை: தமிழகத்தின் அனைத்து ரயில் நிலையங்களிலும் சொந்த பயணத்துக்காக தட்கல் டிக்கெட் எடுப்பவர்களுக்கு தனி வரிசை அமைக்கப்பட்டுள்ளது. நேற்று முதல் இந்த திட்டத்தை ரயில்வே நிர்வாகம் அமல்படுத்தியுள்ளது.
முன்பெல்லாம் திருவிழாக் காலங்களில்தான் ரயில் டிக்கெட் கிடைப்பது குதிரை கொம்பாக இருந்தது. தற்போது அனைத்து நாட்களிலும் டிக்கெட் கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், ரயில் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்வதில் ஏஜெண்டுகள் செய்யும் முறைகேடுகளை கட்டுப்படுத்தும் வகையில் ரயில்வே நிர்வாகம் அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.
அதன்படி சென்னை சென்ட்ரல், எழும்பூர், மாம்பலம், தாம்பரம் ரயில் நிலையங்கள் உள்பட தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ரயில் நிலையங்களில் நேற்று தட்கல் டிக்கெட் பெறுவதற்காக வந்திருந்தவர்கள் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு வரிசையில் நிறுத்தப்பட்டனர்.
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் சொந்த பயணத்துக்காக வந்தவர்களுக்கு 4 கவுண்டர்களும், பிரதிநிதிகளுக்காக வந்தவர்களுக்கு ஒரே ஒரு கவுண்டரும் அனுமதி அளிக்கப்பட்டது. இதன்படி சொந்த பயணத்துக்காக வந்தவர்கள் 98 பேருக்கும் பிரதிநிதிகளுக்காக வந்தவர்களில் 27 பேருக்கும் டிக்கெட்டுகள் கிடைத்தன.
இதே போன்று சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்தவர்களில் 70 சதவீதம் பேர் சொந்த பயணத்திற்காக வந்தவர்கள் என்றும், 30 சதவீதம் பேர் பிரதிநிதிகளுக்காக டிக்கெட் எடுக்க வந்தவர்கள் என்றும் தெரிய வந்தது. இந்த முறையின்படி சொந்த பயணத்திற்கு வந்தவர்கள் அதிக பயன் அடைந்துள்ளதால், பயணிகள் மத்தியில் இந்த முறைக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications