அடக்கு முறைக்கு அஞ்சுவதில்லை- கட்சிகளின் வெற்றியை தீர்மானிக்கும் கட்சி நாங்களே- சீமான்!
கடலூர்: தமிழக அரசின் அடக்குமுறையைக் கண்டு அஞ்சமாட்டோம். அரசியல் கட்சிகளின் வெற்றியைத் தீர்மானிக்கும் கட்சி நாங்களே என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
கடலூரில் இன்று நடைபெற இருந்த நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டம் தடை செய்யப்பட்டதை அடுத்து ஒரு திருமண மண்டபத்தில் உள்ளரங்கு கூட்டமாக அது நடத்தப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் பேசிய சீமான், கடந்த தேர்தலில் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக ஓட்டுக் கேட்டு பல்வேறு கூட்டங்களை நடத்தினேன். அந்தக் கூட்டங்கள் நடந்த மேடைகளில் எல்லாம் பிரபாகரன் படத்தைப் போட்டிருந்தோம். அப்போது பிடித்தது, இப்போது பிடிக்கவில்லையா?. இதுபோல் 2 ஆயிரத்துக்கும் அதிகமான கூட்டங்களில் நான் பேசியிருக்கிறேன். அந்தக் கூட்டங்களில் எல்லாம் பிரபாகரன் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. அப்போதெல்லாம் என்ன கலவரமா வெடித்தது?
நாங்கள் வெற்றியை நிர்ணயிக்கும் கட்சியாக வளர்ந்திருக்கிறோம். திமுக., அதிமுக., இரண்டுக்குமே இது கடைசித் தருணம். இதுபோன்ற அடக்குமுறைகளுக்கு எல்லாம் நாங்கள் அஞ்ச மாட்டோம். மீண்டும் நீதிமன்றம் சென்று, தடையை அகற்றி இதை விட பெரிய அளவில் பொதுக்கூட்டத்தை நடத்த ஏற்பாடு செய்வோம் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications