மலேசிய தமிழர்கள் படுகொலை..தமிழக அரசுக்கு பாஜக வேண்டுகோள்!
சென்னை: மலேசியாவில் வாழும் இந்திய வம்சாவளித் தமிழர்கள் தொடர்ந்தும் படுகொலை செய்யப்படுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு பாரதிய ஜனதா கட்சியின் தமிழ் மாநிலத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் கேட்டுக் கொண்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மலேசியாவில் வாழும் இந்திய வம்சாவளித் தமிழர்கள் கடந்த 3 மாதங்களாக எவ்வித காரணங்களும் இன்றி சுட்டுக் கொல்லப்பட்டு வருவதாக அங்கிருந்து அதிர்ச்சி தரும் செய்திகள் வருகின்றன. பல நூற்றாண்டுகளாக அங்கு வாழும் தமிழர்கள் மலேசியத் தமிழர்கள் என்று அழைக்கப்பட்டு மலேசியப் பிரஜைகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளனர். ஆனாலும் அவர்கள் மீது இத்தகைய கொடுமைகள் இழைக்கப்படுவது வேதனை அளிக்கிறது.
இனியும் தாமதிக்காமல் மலேசிய அரசின் தமிழர்களுக்கு எதிரான செயல்களைத் தடுத்து நிறுத்த வேண்டும். இந்த விஷயத்தை மத்திய அரசின் கவனத்துக்கு முதல்வர் ஜெயலலிதா கொண்டு செல்ல வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications