இந்தியா வந்தார் சீன பிரதமர்: எல்லைப் பிரச்சனை குறித்து மன்மோகனுடன் பேச்சு

இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே எல்லைப் பிரச்சனை தீராத பிரச்சனையாக உள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு எல்லைப் பகுதியில் சீன ராணுவம் சத்தமில்லாமல் நுழைந்து தவுலத் பெக் ஒல்தி பகுதியில் கூடாரங்களை அமைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து இரு நாட்டு அதிகாரிகளும் சந்தித்து பேசி இந்த பிரச்சனைக்கு சுமூகத் தீர்வு காணப்பட்டது. இங்கு பிரச்சனை நடந்து கொண்டிருந்த போது மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் சீனாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
இந்நிலையில் 3 நாள் பயணமாக சீன பிரதமர் லீ கெகியாங் இன்று இந்தியா வருகிறார் என்று கூறப்பட்டது. அதன்படி அவர் இன்று மதியம் டெல்லியில் வந்திறங்கினார். அவர் இன்று மாலை பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து எல்லை பிரச்சனை உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். இன்று இரவு லீக்கு மன்மோகன் சிங் விருந்து கொடுக்கிறார்.
நாளை லீக்கு ராஷ்ட்ரபதி பவனில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. இதையடுத்து அவர் ராஜ்காட் சென்று காந்தியின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்துகிறார்.
அதன் பிறகு அவர் மீண்டும் பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். அப்போது இரு நாடுகளுக்கும் இடையே சில ஒப்பந்தங்கள் கையெழுத்தாகவிருக்கிறது. அதன் பிறகு லீக்கு பிரதமர் மதிய விருந்து அளிக்கிறார். லீயை வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித், பாஜக மூத்த தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோர் சந்தித்து பேசுகின்றனர். லீ துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோரையும் சந்திக்கிறார்.
செவ்வாய்கிழமை தாஜ் பேலஸ் ஹோட்டலில் நடக்கும் கூட்டத்தில் பேசுகிறார். அதன் பிறகு மும்பை செல்லும் அவர் டிசிஎஸ் அலுவலகத்திற்கு செல்கிறார். சீனா-ஜப்பான் இடையேயான இரண்டாவது போரின்போது இந்தியாவால் சீனாவுக்கு அனுப்பி வைக்கப்பட்ட துவாரகாநாத் கொட்னிஸ் உறவினர்களை அவர் சந்தித்து பேசுகிறார்.
பிரம்மபுத்ரா நதியின் குறுக்கே சீனா கட்டும் 3 அணைகளால் இந்தியாவுக்கு வரும் தண்ணீரின் அளவு வெகுவாகக் குறையும் என்று இந்தியா அஞ்சுகிறது. ஆனால் தண்ணீரின் அளவு குறையாது என்கிறது சீனா. இந்நிலையில் இந்தியா வரும் லீயிடம் நதி நீர் ஆணையம் அமைக்க அல்லது நதி நீர் பங்கீடு குறித்து முடிவு செய்ய குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படும் என்று கூறப்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications