ஆந்திராவில் அடிக்கடி பெய்யும் ’500 ரூபாய்’ பணமழை: தொடரும் மர்மம்
நகரி: அரசு பஸ்சில் இருந்து திடீரென பறந்து வந்த 500 ரூபாய் நோட்டுகளால் ரோட்டில் சென்ற மக்கள் ஆனந்த அதிர்ச்சிக்குள்ளானார்களாம். பறந்து வந்த பணத்தைப் பொறுக்குவதில் பொதுமக்கள் இடையே தள்ளு முள்ளு மோதல் ஏற்பட்டதாம். சினிமாவில் வருவது போல் கடைசியாக வந்த போலீசாருக்கு வெறும் 11 ஐநூறு ரூபாய் நோட்டுகள் மட்டுமே கிடைத்ததாம்.
ஆந்திர மாநிலம், வரங்கல் மாவட்டம் பரசலா பஸ் நிலையத்தில் இருந்து அனுமகொண்டா என்ற ஊருக்கு சென்ற அரசு பஸ் ஒன்றில் இருந்து 500 ரூபாய் நோட்டுகள் காற்றில் பறந்து சாலையில் விழுந்தது. பஸ்ஸின் பின் இருக்கையில் இருந்த மர்ம நபர் யாரோ தான் இச்செயலை செய்திருக்க வாய்ப்பிருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
திடீரென 500 ரூபாய் நோட்டுகள் காற்றில் பறந்து ரோட்டில் விழுவதைப் பார்க்க, பண மழை கொட்டுவது போல் இருந்ததாம். சாலையில் சென்ற பொதுமக்கள் பணத்தை பொறுக்குவதில் போட்டியிட்டனர்.
தகவல் கிடைத்து விரைந்து வந்த போலீசாருக்கு அங்கு விரைந்து வந்தனர். பொதுமக்கள் பொறுக்கிய 500 ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்ததில், மொத்தம் 11 நோட்டுகள் மட்டுமே போலீஸ் வசம் சிக்கியது. ஆனால் ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள நோட்டுகள் ரோட்டில் பறக்க விடப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.
கடந்த பிப்ரவரி மாதம் இதே பரசலாவில் ஆட்டோவில் இருந்து 500 ரூபாய் நோட்டுகளை வீசி மர்ம மனிதர்கள் பண மழை பெய்ய விட்டது குறிப்பிடத்தக்கது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications