ஸ்ரீசாந்த், சவான், சாண்டிலா தானாகவும், மிரட்டப்பட்டும் ஸ்பாட் பிக்ஸிங் செய்தார்களாம்

இது குறித்து டெல்லி போலீசாருக்கு நெருங்கிய வட்டாரத்தில் கூறப்படுவதாவது,
ஸ்ரீசாந்த், அங்கீத் சவான் மற்றும் அஜீத் சாண்டிலாவுக்கு ஸ்பாட் பிக்ஸிங் கூலி பணமாகவும், பிற வழிகளும் அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் அந்த பணத்தை வைத்து எலக்ட்ரானிக் பொருட்கள், பார்ட்டிகள், செல்போன்களுக்கு செல்வு செய்துள்ளனர். கிரிக்கெட் வீரர்களுக்கும், தரகர்களுக்கும் இடையேயான ஆளாக செயல்பட்ட ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் முன்னாள் வீரர் அமித் சிங் அளித்த பணத்தை வைத்து சாண்டிலா ரூ. 2.5 லட்சத்திற்கு 2 ஜீன்ஸ் வாங்கியுள்ளார்.
சாண்டிலா தனது மனைவியிடம் சிலர் வீட்டுக்கு வந்து பணம் கொடுப்பார்கள் என்று செல்போனில் கூறியது பதிவாகியிருந்தது. அதற்கு அவரது மனைவி உங்களுக்கு எப்படி இவ்வளவு பணம் கிடைத்தது என்று கேட்டதும் பதிவாகியிருந்தது. ஸ்ரீசாந்துக்கு கொடுக்கச் சொல்லி அவரது சார்பில் பிற தரகர்களுடன் தொடர்பில் இருந்த தரகர் ஜிஜு ஜனார்தனிடம் ரூ.10 லட்சம் கொடுக்கப்பட்டுள்ளது. சவானுக்கும் முன்பணம் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் அவர் குறிப்பிட்ட தொகையை செலவு செய்துவிட்டார். மேலும் சாண்டிலாவுக்கு விலை உயர்ந்த கடிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த பரிசுப் பொருட்கள் வாங்கப்பட்ட கடைகளின் சிசிடிவி கேமராக்களை போலீசார் பார்த்து வருகின்றனர். அதில் அந்த பரிசுப் பொருட்கள் வாங்கிய வீடியோ கிடைத்தால் அதுவே ஆதாரமாக கருதப்படும். தரகர்கள் பிற வீரர்களையும் ஸ்பாட் பிக்ஸிங்கில் ஈடுபடச் செய்ய விரும்பியுள்ளனர். பிராட் ஹாக், கெவன் கூப்பர் மற்றும் சித்தார்த் த்ரிவேதி ஆகியோரை பார்ட்டிக்கு அழைத்து வருமாறு தரகர்கள் சாண்டிலாவிடம் தெரிவித்துள்ளனர். ஆனால் அவர்கள் பார்ட்டிக்கு செல்லவில்லை.
டெல்லி போலீசார் ஸ்பாட் பிக்ஸிங் குறித்து விசாரிக்க மும்பை, அகமதாபாத், ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா சென்றுள்ளனர். அவர்களில் ஒரு குழு பரிதாபாத்தில் உள்ள சாண்டிலாவின் வீட்டுக்கு சென்று விசாரித்ததாகக் கூறப்படுகிறது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications