ஸ்ரீசாந்த் சிக்கியபோது ஹோட்டலில் அவருடன் இருந்த மராத்திய நடிகை யார்?

ஐபிஎல் போட்டிகளில் ஸ்பாட் பிக்ஸிங் செய்த குற்றத்திற்காக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் ஸ்ரீசாந்த் உள்பட 3 வீரர்களை டெல்லி போலீசார் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கைது செய்தனர். ஸ்ரீசாந்த்தை கைது செய்தபோது அவர் தங்கியிருந்த ஹோட்டல் அறையில் அவருடன் 2 மாடல் அழகிகளும், மராத்திய நடிகை ஒருவரும் இருந்துள்ளனர்.
போலீசார் அந்த மராத்திய நடிகையிடம் விசாரணை நடத்தியுள்ளனர். ஆனால் அந்த நடிகை யார் என்ற விவரத்தை தெரிவிக்க போலீசார் மறுத்துவிட்டனர். சூதாட்டக் கும்பல் இந்த நடிகையை பயன்படுத்தி ஸ்ரீசாந்திடம் வேலை வாங்கி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
ஸ்ரீசாந்த் அறையில் இருந்து அவரது லேப்டாப், டேட்டா கார்டு, ஐபேட், டைரிகள் மற்றும் செல்போன் ஆகியற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். ஸ்ரீசாந்த் மீது மும்பை போலீசாரும் வழக்குப் பதிவு செய்யக்கூடும் என்று தெரிகிறது.
சென்னையில் 20 தரகர்கள் பதுங்கல்:
ஸ்பாட் பிக்ஸிங் தொடர்பாக சென்னையில் 6 தரகர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் விசாரித்ததில் சென்னையில் மேலும் 20 தரகர்கள் இருப்பது தெரிய வந்துள்ளது. அதில் 12 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களை பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் சூதாட்ட கும்பலின் தலைவன் பிரசாந்த, மனைவி, மகன்களுடன் தென்னாப்பிரிக்காவுக்கு தப்பியோடிவிட்டார். பிரசாந்துக்கு யாருடன் எல்லாம் தொடர்பு இருந்தது என்று தற்போது சிறையில் இருக்கும் 6 தரகர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
மேலும் அயனாவரத்தில் உள்ள பிரசாந்தின் சொகுசு பங்களாவில் சோதனை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். பிரசாந்தும், தலைமறைவாக உள்ள அவரது கூட்டாளிகளும் சிக்கினால் கிரிக்கெட் சூதாட்டம் பற்றி பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications