ஜாக்கிரதை... இனி சேவை வரி கட்டாவிட்டால் 7 ஆண்டு கம்பி எண்ணனும்!

சேவை வரி கட்டாமல் ஏமாற்றுபவர்களை கைது செய்வதற்கு இதுவரை குறிப்பிட்ட சட்டம் இல்லை. எனவே, குற்றவாளிகள் எளிதாக தப்பித்து வந்தனர்.
ஆனால், கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 2013-ம் ஆண்டுக்கான நிதி மசோதா மூலம், சேவை வரி ஏய்ப்பாளர்களை கைது செய்வதற்கு வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
7 ஆண்டுகள் சிறை...
இதன்மூலம், சேவை வரி கட்டாமல் ஏமாற்றும் நிறுவனத்தின் மேலாளர், செயலாளர் அல்லது இயக்குனரை கைது செய்யவும், வரி ஏய்ப்புத்தொகை ரு.50 லட்சத்திற்கும் அதிகமாக இருந்தால் அவர்களுக்கு 7 ஆண்டுகள் வரை ஜெயில் தண்டனை விதிக்கவும் முடியும். அதோடு அவர்களுக்கு ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கவும் வழிவகை செய்யப்பட்டிருக்கிறது.
புதிய நிதி மசோதா...
இந்த ஆண்டின் நிதி மசோதாவில் 91-வது பிரிவு புதிதாக சேர்க்கப்பட்டுள்ளதன்படி மத்திய உற்பத்திவரி துறையில் சூப்பிரண்டு பதவி அந்தஸ்துக்கு குறையாத அதிகாரி ஒருவர் இந்த கைது நடவடிக்கையை மேற்கொள்ளலாம். 1944-ம் ஆண்டு மத்திய உற்பத்தி வரி சட்ட விதிகளிலும் திருத்தம் செய்யப்பட்டு உள்ளது.
ஜாமீனில் வெளிவரமுடியாது...
அதன்படி, வரி விதிக்க வேண்டிய பொருட்களின் மதிப்பு ரூ.50 லட்சத்தைத் தாண்டினால், வரி ஏய்ப்பாளர்களை கோர்ட்டு வாரண்டு எதுவுமின்றி (ஜாமீனில் வெளிவர முடியாத குற்றப்பிரிவின் கீழ்) கைது செய்ய அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது.
400 கோடி சுங்கவரி ஏய்ப்பு....
இந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை மட்டும் ரு.400 கோடி அளவுக்கு சுங்கவரி மற்றும் சேவை வரி ஏய்ப்பு நடந்துள்ளதை மத்திய நிதி அமைச்சகம் கண்டுபிடித்து உள்ளதாம். கடந்த ஆண்டு அக்டோபர் முதல் டிசம்பர் வரை மறைமுக வரிகளில் ரூ.2,600 கோடி வரை ஏய்ப்பு நடந்துள்ளதாகவும் வருவாய்த்துறை கண்டுபிடித்து உள்ளது.
பொதுமன்னிப்பும் உண்டு...
சேவை வரி ஏய்ப்பாளர்கள், வரி பாக்கியை ஒரே நேரத்தில் செலுத்த முன்வந்தால், அவர்களுக்கு அபராதமோ அல்லது காலதாமத கட்டணமோ இன்றி பொது மன்னிப்பு வழங்கும் திட்டத்தையும் மத்திய நிதித்துறை அமைச்சகம் அறிமுகப் படுத்தியுள்ளது.
விரைவில் சலுகை....
2013-14-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி மந்திரி ப.சிதம்பரம் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தபோது இந்த திட்டம் முதன் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது. சேவை வரி செலுத்துவதற்காக பதிவு செய்துள்ள 17 லட்சம் பேரில் 7 லட்சம் பேர் மட்டுமே சேவை வரி கணக்கு விவரங்களை தாக்கல் செய்து இருப்பதாகவும், அவர்களை கணக்கு தாக்கல் செய்ய ஊக்குவிப்பதற்காக இந்த வாய்ப்பு அளிக்கப்படுவதாக, ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இதுவே முதல்முறை...
சுங்கம் மற்றும் மத்திய உற்பத்தி வரி வரிசையில், சேவை வரி விதிமுறைகளும் திருத்தப்படுவது இதுவே முதல் முறை ஆகும்.
-
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே -
தவெகவில் விஜய்க்கு அடுத்ததாக அதிக சொத்து உள்ள நபர் இவரா? அதுவும் இத்தனை கோடி! ஆச்சரியத்தில் நெட்டிசன்கள்












Click it and Unblock the Notifications