மீண்டும் சுனாமி: எச்சரிக்கும் சிவன்மலை- மக்கள் பீதி
திருப்பூர்: கொங்கு மண்டலத்தின் புகழ்பெற்ற ஸ்தலமான சிவன்மலையில் தண்ணீர் வைத்து பூஜை செய்யப்படுவதால் மீண்டும் சுனாமி வருமோ என பொது மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.
கொங்கு நாட்டின் மையப்பகுதியான காங்கயத்திற்கு அருகில் காங்கயம்-திருப்பூர் சாலையில் சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது புகழ் பெற்ற சிவன்மலை. சிவன்மலை முருகப் பெருமானின் சிறந்த திருத்தலமாகும். இது கொங்கு நாட்டின் புகழ் பெற்ற திருத்தலங்களில் ஒன்றாகும். இங்குள்ள முருகன் சக்தி வாய்ந்த தெய்வமாகும்.
உலகத்தில் எங்கோ நடைபெற உள்ள ஒரு சம்பவத்தை தனது பக்தர்கள் கனவில் முன்பே வந்து தெரிவிக்கும் அபூர்வ அருள் சக்தி கொண்டவர் சிவன்மலை முருகர். இந்த நிலையில் கடந்த 2012ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 13ம் தேதி அன்று கோவை, கருமத்தம்பட்டியைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவர் கனவில் கோவிலில் தண்ணீர் வைக்குமாறு உத்தரவு வந்தது.
இதற்கு அடுத்த நாள் முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை உயர்த்துவது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசுக்கு சாதகமான தீர்ப்பு வந்தது. அதே போல சென்னை அருகே பழவேற்காடு ஏரியில் படகு கவிழ்ந்து 20 பேர் பலியாகினர். மேலும் ஈரோடு, வெண்டிபாளையம் காவிரியாற்றில் கதவணை மின் உற்பத்தி நிலையத்தில் தண்ணீர் திறந்தபோது 6 பேர் பரிதாமாக பலியானார்கள்.
ஏற்கனவே ஆற்று நீர் வைத்lதால் பருவமழை பொய்த்ததுடன், ஆற்று நீரால் உயிர் பலிகள் ஏற்பட்டன. தற்போது கோவிலில் மீண்டும் தண்ணீர் வைக்கப்பட்டுள்ளது.
மேலும், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சொம்பில் தண்ணீர் வைக்க உத்தரவு வந்தது. இதையடுத்து சில நாட்களிலேய தமிழகத்தில் மக்களின் மனங்களில் மாறாத வடுவை ஏற்படுத்திய பேரழிவு அரக்கன் என்ற சுனாமி வந்து அப்பாவிகள் பலரின் உயிரை பலிவாங்கிவிட்டது. அப்போது தான் கோவில் பெட்டியில் வைக்கும் பொருளுக்கு மதிப்பு அதிகமானது.
அடுத்து மஞ்சள் வைத்து கோவிலில் பூஜை செய்தனர். முன்பு காட்டில் சும்மா கிடந்த மஞ்சள் தங்கத்தின் விலையை விட அதிக அளவுக்கு மார்க்கெட்டில் விற்பனையானது. மற்றொரு பக்தரின் கனவில் வந்த முருகன் தங்கத்தை வைக்கச் சொல்லி உள்ளார். அப்போது முதல் தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்துவிட்டது.
இந்த நிலையில் தான் தற்போது வேலாயுதம்பாளையத்தை சேர்ந்த ஞானாம்பாள் என்ற பெண் கனவில் வந்த சுவாமி, உத்தரவு பொருளாக தண்ணீர் வைக்கும் படி கூறியுள்ளார்.
இதை அறநிலையத்துறை செயல் அலுவலர் தலைமையில் அதிகாரிகள் உறுதி செய்து, கோவிலில் உள்ள கண்ணாடி பேழையில், ஏற்கனவே வைக்கப்பட்டிருந்த பென்சில் பாக்ஸ் மாற்றப்பட்டு குடுவையில் தண்ணீர் வைக்கப்பட்டது.
இதனால் அடுத்து என்ன நடக்குமா என பொது மக்களும், பக்தர்களும் பெரும் அச்சத்தில் உள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications