சண்டிலா உறவினர் வீட்டில் ஸ்பாட் பிக்சிங் சூதாட்ட பணம் ரூ.20 லட்சம் சிக்கியது!

ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நடைபெற்ற ஸ்பாட் பிக்சிங் சூதாட்டம் நாட்டையே பெரும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இந்த சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் ஸ்ரீசாந்த், அஜித் சாண்டிலா, அங்கீத் சவான் மற்றும் புக்கிகள் பலரை போலீஸ் ஏற்கனவே கைது செய்துள்ளது. ‘
கைது செய்யப்பட்டவர்களிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் அதிர வைக்கும் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. சண்டிலாவிற்கு சூதாட்ட தரகர் சுனிலை அறிமுகப்படுத்தி வைத்த ரஞ்சி டிராப்பி கிரிக்கெட் வீரர் பாபுராவ் யாதவிடம் நேற்று விசாரணை நடந்தது. ஆனால் அவரை போலீசார் கைது செய்யவில்லை.
இந்நிலையில், அரியானா மாநிலம் பால்வால் நகரில் உள்ள சாண்டிலாவின் உறவினர் வீட்டில் டெல்லி போலீசார் சோதனை நடத்தினர். சாண்டிலாவையும் போலீசார் உடன் அழைத்துச் சென்றிருந்தனர். அங்கு சாண்டிலாவின் பையில் இருந்த 20 லட்சம் ரூபாயை போலீசார் கைப்பற்றினர். அந்த பணம் சூதாட்ட பணம் தான் என்பதை சாண்டிலா ஒப்புக்கொண்டார்.
இதற்கிடையே, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் ஊழல் தடுப்பு பிரிவுத் தலைவர் ரவி சவானி டெல்லி காவல்த் துறை ஆணையர், நீரஜ் குமாரை சந்தித்து பேசினார். அப்போது, சூதாட்டம் தொடர்பான விசாரணைக்கு கிரிக்கெட் வாரி யம் முழு ஒத்துழைப்பு தரும் என்று உறுதி அளித்ததார். சூதாட்டத்தில் ஈடுபட்ட 3 வீரர்கள் மீதும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சார்பில் டெல்லி போலீசிடம் முறைப்படி புகார் தரப்பட்டது.மேலும் மூன்று வீரர்களின் ஒப்பந்தத்தையும் ரத்து செய்து விட் டதாக ராஜஸ்தான் ராயல்ஸ் நேற்று இரவு அறிவித்தது.
இந்த நிலையில், ஐ.பி. எல் சூதாட்டம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கு ஒன்று நேற்று தாக்கல்செய்யப்பட்டுள்ளது. மேலும் பிளே ஆப் மற்றும் இறுதிப் போட்டிகளை விசாரணை முடியும் நடத்தக் கூடாது என்றும் அந்த மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கிடையே, சூதாட்ட வழக்கின் முதல் தகவல் அறிக்கை நகல் கேட்டு ஸ்ரீசாந்த் டெல்லி நீதிமன்றத்தில் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு மாஜிஸ்திரேட் கவுரவ் ராவ் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஸ்ரீசாந்த் சார்பில் வழக்கறிஞர் யாரும் ஆஜராகவில்லை. இதனால், மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications