பிக்சிங்.. சிக்கிய வின்து சொன்னது.. சீனிவாசன் மருமகன்தான் என்னை சென்னைக்கு கூப்பிட்டாரு

கடந்த மாதம் ஏப்ரல் 9-ந் தேதியன்று சென்னை சேப்பாக்கத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. இந்தப் போட்டியைக் காண வின்து தாரா சிங் சென்னை வந்திருந்தார். அத்துடன் சென்னை அணியின் கேப்டன் டோணியின் மனைவி சாக்ஷி அருகே அமர்ந்து போட்டியை கண்டு ரசித்தார். சாக்ஷியும் வின்து தாராசிங்கும் ரசித்தபடி போட்டியை பார்க்கும் புகைப்படங்களை ஊடகங்கள் வெளியிட்டும் இருந்தன.
அப்போது மும்பை மிட் டே ஊடகத்துக்குப் பேட்டியளித்திருந்த வின்து தாராசிங், அன்று இரவு எனக்கு ஆயிரக்கணக்கான தொலைபேசி அழைப்புகள் வந்தன..டோணியின் மனைவி அருகே அமர்ந்தது ஊடகங்களில் இவ்வளவு முக்கியத்துவ்ம் பெறும் என்று நான் நினைக்கவே இல்லை.. ஏன் ஊடகங்களின் காமிராக்கள் எங்களை நோக்கியே இருந்தது என தெரியவில்லை..
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளரான குருநாத் மெய்யப்பன்தான் எனக்கு மேட்ச் பார்க்க வருமாறு அழைப்பு விடுத்திருந்தார். அவரை எனக்கு நன்றாகத் தெரியும். நான் சென்னை அணியின் பாக்ஸ்க்கு சென்ற போது டோணி மனைவி சாக்ஷிதான் என்னை அழைத்து அருகே உட்காருமாறு கூறினார். கடந்த ஐபிஎல் போட்டியின் போது சந்தித்துக் கொண்டதையும் அவர் நினைவு கூர்ந்தார். பின்னர் டோணியையும் நான் சந்தித்துவிட்டு திருப்பதி பாலாஜியை தரிசிக்கப் போனேன் என்று கூறியிருந்தார்.
தற்போது குருநாத் மெய்யப்பனும் போலீஸ் வலையில் சிக்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications