ஸ்பாட் பிக்ஸிங்: சீனிவாசன் மருமகனை விசாரிக்கும் மும்பை போலீஸ்- கைதாவாரா?

Subscribe to Oneindia Tamil

IPL spot-fixing live: Cops want to question Srinivasan’s son-in-law
மும்பை: ஐபிஎல் ஸ்பாட் பிக்ஸிங் தொடர்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உரிமையாளரும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவருமான சீனிவாசனின் மருமகனும், அணியின் சிஇஓவுமான குருநாத் மெய்யப்பனிடம் மும்பை போலீசார் விசாரணை நடத்தவிருக்கின்றனர்.

ஐபிஎல் போட்டிகளில் ஸ்பாட் பிக்ஸிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் ஸ்ரீசாந்த், அங்கீத் சவான், அஜீத் சாண்டிலா மற்றும் சில தரகர்கள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட தரகர்களில் ஒருவரான ரமேஷ் வியாஸ் அளித்த தகவலின்படி மறைந்த பாலிவுட் நடிகர் தாரா சிங்கின் மகன் வின்து தாரா சிங்(49) நேற்று கைது செய்யப்பட்டார்.

விசாரணையில் ஸ்பாட் பிக்ஸிங்கில் ஈடுபட்டதை அவர் ஒப்புக் கொண்டார். மேலும் தனக்கும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உரிமையாளரும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவருமான சீனிவாசனின் மருமகனும், அணியின் சிஇஓவுமான குருநாத் மெய்யப்பனுக்கும் தொடர்பு உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

அவரது செல்போனில் இருந்து மெய்யப்பனுக்கு அடிக்கடி கால் செய்து பேசியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர் மெய்யப்பனிடம் பேசிய பிறகு வியாஸிடம் போனில் பேசியதாக போலீசார் தெரிவித்தனர். ஆனால் தற்போது மெய்யப்பனும், தானும் நண்பர்கள் என்றும், சொந்த விஷயமாக அவருடன் போனில் பேசியதாகவும் விந்து தெரிவித்துள்ளார்.

இருப்பினும் மெய்யப்பனிடம் விசாரணை நடத்த மும்பை போலீசார் தீர்மானித்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+