ம.பி.யில் 7 வயது சிறுமியை கடத்தி, கற்பழித்துக் கொன்ற பெரியப்பா மகன்
போபால்: மத்திய பிரதேசத்தில் 7வது சிறுமியை அவரது தந்தையின் சகோதரரின் மகன் கடத்திச் சென்று, கற்பழித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் மந்த்சார் பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுமி கோடை விடுமுறையை கழிக்க மால்ஹர்கார் நகரில் உள்ள தனது பாட்டி வீட்டுக்கு சென்றார். அங்கு சிறுமியின் தந்தையின் சகோதரர் மகன் ஹனி ஓத்வால்(17) வந்துள்ளார். பாட்டியுடன் தூங்கிக் கொண்டிருந்த சிறுமியை கடத்திச் சென்று, கற்பழித்து அவரது குரல் வளையை நெறித்துக் கொன்று தண்ணீர் தொட்டியில் உடலை வீசிவிட்டார்.
இந்த சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்தது. மறுநாள் காலை சிறுமியை காணாமல் அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடினர். அப்போது அருகில் உள்ள உறவினர் வீட்டு தண்ணீர் தொட்டியில் சிறுமியின் உடல் கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் ஹனியை கைது செய்தனர்.
இது குறித்து எஸ்.பி. எம்.எஸ். வர்மா கூறுகையில்,
பாட்டியுடன் தூங்கிக் கொண்டிருந்த சிறுமியை ஹனி கற்பழிக்கும் எண்ணத்துடன் தனது அறைக்கு தூக்கிச் சென்றார். சிறுமி கத்தியதால் அவரை கொன்று உடலை தனது வீட்டு பேஸ்மென்ட்டில் உள்ள தண்ணீர் தொட்டியில் போட்டுவிட்டார் என்று தெரிவித்தார்.
இந்த சம்பவம் நடந்தது தங்களுக்கு தெரியாது என்றும், அந்த நேரத்தில் தாங்கள் தூங்கிக் கொண்டிருந்ததாகவும் ஹனியின் பெற்றோர் போலீசில் தெரிவித்துள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications