திமுகவுடனான உறவில் கசப்பு.. உரசல்... விரிசல் எதுவுமே இல்லை: தொல். திருமாவளவன்

Subscribe to Oneindia Tamil

Thirumavalavan
சென்னை: மரக்காணம் கலவரத்தைத் தொடர்ந்து அரசின் நடவடிக்கைக்கு எதிராகவும் பாமகவுக்கு ஆதரவாகவும் திமுக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் நிலையில் தொடர்ந்தும் விடுதலைச் சிறுத்தைகள் திமுக கூட்டணியிலேயே நீடிக்கிறது என்று அதன் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தொல். திருமாவளவன், ஆளுங்கட்சியை விமர்சிப்பது என்பது எதிர்க்கட்சியின் கடமை. அந்த அடிப்படையில் மரக்காணம் கலவரம் தொடர்பான அரசின் நடவடிக்கையை தி.மு.க. தலைவர் கருணாநிதி கண்டித்து இருப்பதாக கருதுகிறேன். அதற்காக அவர் விடுதலை சிறுத்தைகளுக்கு எதிராக செயல்பட்டதாக நாங்கள் நினைக்கவில்லை. நாங்கள் அப்படி ஒருபோதும் உணரவும் இல்லை. தற்போதும் கூட தி.மு.க.வின் முன்னணி தலைவர்களை சந்தித்து பேசிக் கொண்டுதான் இருக்கிறேன். பா.ம.க.வை கூட்டணியில் சேர்த்து கொள்ளவேண்டும் என்பதற்காக தி.மு.க. முயற்சி செய்கிறது என்று கூறுவது தவறு. எந்த ஒரு திராவிட கட்சியுமே பாட்டாளி மக்கள் கட்சியை தங்களது கூட்டணியில் சேர்த்துக் கொள்ள வாய்ப்பு இல்லை.

தலித் மக்களை, உழைக்கும் மக்கள் பாதிக்கப்படுகின்ற வகையில் வன்முறையை தூண்டுவது ஆபத்தானது.எங்கள் மீது சுமத்தப்பட்டுள்ள அவதூறுகள், வீண் பழிகளை போக்க வேண்டும். தேர்தலை பற்றி சிந்திக்க நேரமில்லை. சுயநல அரசியலுக்காக உழைக்கின்ற மக்கள் பலியாகின்றனர். அவர்களை காப்பாற்றுவதற்காகத்தான் அனைத்துக் கட்சி தலைவர்களை சந்தித்தோம். மரக்காணம் கலவரத்தை முன்வைத்து தி.மு.க.வுக்கும் விடுதலை சிறுத்தைகளுக்கும் இடையே எந்த பிரச்சினையும் எழவில்லை. எங்கள் உறவில் எந்த கசப்பும் உருவாகவில்லை. இரு கட்சிகளிடையே உரசலும் இல்லை... விரிசலும் இல்லை. இந்த பிரச்சினையை தேர்தல் அரசியலாக நாங்கள் யாரும் கருதவில்லை என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+