கொல்கத்தா, டெல்லியில் ’மாம்பழத் திருவிழா’...:45 அரிய வகை மாம்பழங்கள் இடம்பெறுகிறது
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் மாம்பழ அமோக விளைச்சல் எதிரொலியாக கொல்கத்தா மற்றும் டெல்லியில் மாம்பழ கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்ற ஆண்டை ஒப்பிடும் பொழுது மேற்கு வங்காளத்தில் மாம்பழ விளைச்சல் அதிகரித்துள்ளது. இதனையடுத்து, கொல்கத்தா மற்றும் புதுடெல்லியில் மாம்பழ கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மேற்கு வங்க வேளாண்மை துறை அமைச்சர் சுப்ரதா சாகா தெரிவித்துள்ளார்.
மாம்பழம் விளைவிப்போருக்கு தேவையான வணிக வாய்ப்புகள் கிடைக்க ஏதுவாகவும், பொது மக்களும் அரியவகை மாம்பழங்களை மலிவான விலையில் வாங்கி சுவைக்கவும் இந்த கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாம்.

15 சதவீதம் உயர்வு...
மேற்கு வங்க மாநிலத்தில் இந்த ஆண்டின் மாம்பழ விளைச்சல் முந்தைய ஆண்டை விட 15 சதவிகிதம் உயர்ந்துள்ளது.

7.23 டன் மாம்பழங்கள்...
முர்ஷிதாபாத், மால்டா உள்ளிட்ட மாம்பழ விளைச்சல் அதிகம் உள்ள மாவட்டங்களில் இதுவரை 7.23 லட்சம் டன் மாம்பழம் உற்பத்தியாகியுள்ளது.

மாம்பழக் கண்காட்சி...
இதனால் அரசு சார்பில் கொல்கத்தா மற்றும் புதுடெல்லியில் மாம்பழ கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

45 அரிய வகை மாம்பழங்கள்...
மால்டா மற்றும் முர்ஷிதாபாத்தில் விளையும் 45 அரியவகை மாம்பழங்கள் இந்த மாம்பழ கண்காட்சியில் இடம்பெற இருக்கிறது.

சுவையான வணிக வாய்ப்புகள்...
இந்தக் கண்காட்சி டெல்லியில் உள்ள பங்கா பவன், கொல்கத்தாவில் உள்ள சாகித் மினார் ஆகிய இடங்களில் ஜுன் 11 முதல் 15 நாட்கள் வரை நடைபெறும்.

ஒரே கல்லுல ரெண்டு மாம்பழம்...
'இந்த கண்காட்சியின் வாயிலாக மாம்பழம் விளைவிப்போருக்கு தேவையான வணிக வாய்ப்புகள் கிடைக்கும். பொது மக்களுக்கும் அரியவகை மாம்பழங்களை மலிவான விலையில் வாங்கி சுவைக்க முடியும்' என சுப்ரதா தெரிவித்தார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications