ஐ.மு.அரசு ஆட்சி காலத்தை இடையூறு இன்றி நிறைவு செய்யும்: சல்மான் குர்ஷித் உறுதி
Subscribe to Oneindia Tamil

ஐக்கிய முற்போக்கு கூட்டணி மத்தியில் ஆட்சி அமைத்து நான்கு ஆண்டுகள் முடிந்துள்ளது. இதனைக் கொண்டாடும் வகையில் நேற்று ஐ.மு. கூட்டணியில் இடம் பெற்றுள்ள அரசியல் கட்சி தலைவர்களுக்கு பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் விருந்து அளிக்கப்பட்டது.
அதுபற்றி பேசிய மத்திய வெளியுறவுத் துறை மந்திரி சல்மான் குர்ஷித் கூறியதாவது, 'மத்திய அரசுக்கு எந்த ஒரு நெருக்கடியும் இல்லை. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அதன் ஆட்சி காலத்தை நிறைவு செய்யும் என்று கூறியுள்ளார்.
மேலும், 'பாரதீய ஜனதா பாராளுமன்றத்தை தொடர்ந்து நடைபெறவிடாமல் இடையூறு செய்து வருகிறது. பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது என்றும் உலகில் 2வது வேகமான பொருளாதார வளர்ச்சி பெற்றுள்ள நாடு இந்தியா' என சல்மான் குர்ஷித் பெருமிதம் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications