காவிரிப் பிரச்சினையில் தமிழர்களுக்கு எதிராக கர்நாடகா சதி! வைகோ குற்றச்சாட்டு
சென்னை: காவிரி நதிநீர் பிரச்சினையில் தமிழர்களுக்கு எதிராக கர்நாடக அரசு செயல்படுவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
கர்நாடக மாநிலத்தில் எவர் ஆட்சிக்கு வந்தாலும் காவிரிப் பிரச்சினையில் தமிழ்நாட்டுக்கு வஞ்சகம் இழைப்பதே வாடிக்கை ஆகி விட்டது. கர்நாடகத்தில் புதிய முதல்வராகப் பதவி ஏற்று உள்ள சித்தராமையாவும் இதற்கு விதி விலக்கு அல்ல.
தமிழ்நாட்டுக்குக் காவிரி நீரைத் திறந்துவிடுமாறு உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைச் செயல்படுத்த, பா.ஜ.க. முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் முயன்றபோது, எதிர்க்கட்சித் தலைவராக இருந்த சித்தராமையா கடும் எதிர்ப்புத் தெரிவித்தார்.
தற்போது, கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.பரமேஸ்வரா, காவிரிப் பிரச்சினையில் முந்தைய பா.ஜ.க. அரசு கர்நாடக மக்களுக்குத் துரோகம் இழைத்து விட்டது; காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு மத்திய அரசு இதழில் வெளியிடப்பட்டு இருந்தாலும், அதனை மறுபரிசீலனை செய்யுமாறு கோருவோம் என்று கூறி இருக்கின்றார். மேலும், காவிரி நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பு, தமிழ்நாட்டுக்குச் சாதகமாக இருப்பதாகவும் தெரிவித்து இருக்கின்றார். ஆளும் காங்கிரஸ் அரசின் முதல்வர் சித்தராமையாவின் கருத்தையே, காங்கிரஸ் தலைவரின் அறிவிப்பு வெளிப்படுத்துகிறது.
காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு உச்சநீதிமன்றத்தின் ஆணைப்படி மத்திய அரசால் பிப்ரவரி 20 ஆம் தேதி, அரசு இதழில் வெளியிடப்பட்டது. அதில் மீண்டும் மறுபரிசீலனை என்ற பேச்சுக்கே இடம் இல்லை. சட்டப்படி அதில் எந்த நியாயமும் இல்லை.
நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பை நடைமுறைப்படுத்திட, காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம், காவிரி நதிநீர் ஒழுங்குமுறை ஆணையத்தை உடனடியாக மத்திய அரசு அமைத்து இருக்க வேண்டும். ஆனால், கர்நாடக சட்டமன்றத் தேர்தலைக் கருத்தில் கொண்டு மத்திய காங்கிரஸ் அரசு வேண்டும் என்றே தாமதம் செய்தது.
தற்போது காங்கிரஸ் ஆட்சி கர்நாடகத்தில் வந்துவிட்டது. இனி, கர்நாடகத்திற்குச் சாதகமாகவே மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு நடந்துகொள்ளும் என்பது, பழைய நிகழ்ச்சிகளின் மூலம் நமக்குத் தெளிவாகப் புலனாகிறது.
தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் இதற்காக வழக்குத் தொடுத்து இருக்கின்றது. காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் மற்றும் ஒழுங்குமுறை ஆணையம் அமைக்கக்கோரி, தமிழக அரசு பிரதமரிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
தமிழகத்தின் உயிர்நாடியான காவிரிப் பிரச்சினையில் மத்திய காங்கிரஸ் அரசின் வஞ்சகத்தையும், கர்நாடக மாநில காங்கிரஸ் அரசின் போக்கையும் வன்மையாகக் கண்டிப்பதுடன், தமிழ்நாட்டின் உரிமைகளைக் காப்பாற்ற அனைவரும் ஒருமித்து எழுந்து காவிரிப் பிரச்சினையில் குரல் கொடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications