விண்டுசிங்- குருநாத் இடையேயான தொடர்பு… மாடல் அழகி அம்பலம்

ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகளை விட அனல் பறக்கிறது மேட்ச் பிக்சிங் சர்ச்சை. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்களின் கைதினை அடுத்து நாடுமுழுவதும் நடத்திய தேடுதல் வேட்டையில் ஏராளமான புக்கிகள் சிக்கினர். அவர்களிடம் இருந்து பல லட்சம் ரூபாய் பணம், லேப் டாப், செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த சூதாட்ட புகாரில் மல்யுத்த வீரர் தாராசிங்கின் மகன் விண்டு சிங் கைதாகியுள்ளார். அவர் கொடுத்த தகவலின் பேரில் சென்னை சூப்பர் கிங்ஸ் உரிமையாளர் குருநாத் மெய்யப்பன் சிக்கியுள்ளார்.
இவர்கள் இருவருக்கும் பல்வேறு மாடல் அழகிகள், பாலிவுட், கோலிவுட் நடிகைகளுடன் தொடர்பு உள்ளது. குருநாத் மெய்யப்பனும், விண்டுவும் மாடல் அழகிகளுடன் செல்போனில் பேசியதை மும்பை போலீசார் ஆதரங்களுடன் சேகரித்துள்ளனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், தான் மூன்று முறை சென்னை சென்று வந்ததை ஒத்துக் கொண்டார். தன்னைப் போல பல மாடல் அழகிகள் சென்னை சென்று வந்ததாகவும் கூறினார்.
இதனிடையே குருநாத் மெய்யப்பன் மற்றும் விண்டு சிங் ஆகியோர் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட வீரர்களுக்கும், தரகர்களுக்கும், மாடல் அழகிகளுடன் தொடர்பு ஏற்படுத்தி கொடுத்திருக்கலாம் என்றும் இது விசாரணையில் தெரியவரும் என்றும் போலீசார் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications