மூளைச்சாவு அடைந்த மாணவரின் உறுப்புகள் 7 பேருக்கு தானம்
சென்னை: சென்னையில் விபத்தில் மூளைச்சாவு அடைந்த என்ஜீனியரீங் மாணவரான சாய்கணேஷின் உடல் உறுப்புகளை உதவி வேண்டி வாழும் 7 நோயாளிகளுக்கு பொருத்த அவரது பெற்றோர் சம்மதம் தெரிவித்துள்ளனர்.
கோடம்பாக்கத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தியின் மகன் சாய்கணேஷ் (20). இவர் தாம்பரம் அருகே உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் பி.இ. 3-ம் ஆண்டு படித்து வந்தார்.
சில தினங்களுக்கு முன்பு சாய்கணேஷ் மோட்டார் சைக்கிள் விபத்தில், தலையில் பலத்த காயம் அடைந்தார். சாய்க்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று மூளைச்சாவு ஏற்பட்டது. இதனை டாக்டர்கள் நேற்று இரவு உறுதி செய்தனர்.
மகனின் இழப்பு மனதில் கனத்தாலும், உடனடியாக சாயின் உடல் உறுப்புகளை தானம் செய்ய பெற்றோர் முன் வந்தனர். பெற்றோரின் சம்மதத்தின் பேரில், சாய்கணேசின் இதயம், சிறுநீரகங்கள், கண்கள் உள்பட 7 உறுப்புகளை டாக்டர்கள் ஆபரேசன் மூலம் பிரித்தெடுத்தனர்.
பின் உடனடியாக அந்த உறுப்புகள், தேவையில் இருந்த 7 நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டது. இதன் மூலம் அவர்களின் உயிர் காப்பாற்றப்பட்டது.
இது குறித்து அவரின் பெற்றோர் கூறியதாவது, ‘சாய்கணேசுக்கு இன்று 21-வது பிறந்த நாள். பிறந்த நாள் இறந்த நாளாக மாறி அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டிருக்கிறது. சாய்கணேஷ் எங்களோடு இல்லாவிட்டாலும் 7 பேர் வடிவத்தில் நடமாடுகிறான் ' என அவரது தந்தை கிருஷ்ண மூர்த்தி, தாய் ராஜலெட்சுமி ஆகியோர் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications