சிறையில் ரூ.25 சம்பளத்திற்கு பைண்டிங் வேலை செய்யப்போகும் நடிகர் சஞ்சய் தத்
மும்பை: மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் புனே ஏர்வாடா சிறையில் உள்ள பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்துக்கு பேப்பர் பைல்கள் செய்வது மற்றும் பேப்பர் பைண்டிங் செய்வது ஆகிய பணிகள் வழங்கப்பட உள்ளது.
மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் மும்பை தடா நீதிமன்றத்தில் ஆஜரான பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டார். அதன் பிறகு புனேவில் உள்ள ஏர்வாடா சிறைக்கு மாற்றப்பட்டார்.
சிறை கைதிகள் சமைப்பது, மெழுகுவர்த்தி செய்வது போன்ற பணிகளை செய்வது வழக்கம். சஞ்சய் தத்துக்கு என்ன பணி கொடுக்கப் போகிறார்களோ என்று ஊடகங்கள் யூகித்துக் கொண்டிருந்தன. இந்நிலையில் அவருக்கு வழங்கப்படவிருக்கும் பணி என்னவென்று தெரிய வந்துள்ளது.

பைண்டிங் வேலை
பாதுகாப்பு காரணங்களுக்காக சஞ்சய் தத் சக கைதிகளுடன் சேர்ந்து இருக்காதவாறு போலீசார் பார்த்துக் கொள்கின்றனர். அதனால் அவர் தனது அறையில் இருந்தே பேப்பர் பைல் செய்வது, பேப்பர் பைண்டிங் செய்வது ஆகிய வேலைகளை செய்யவிருக்கிறார்.

ரூ.25 முதல் ரூ.40 வரை சம்பளம்
கொடுத்த வேலையை முடித்தால் கைதிகளுக்கு ரூ.25 முதல் ரூ.40 வரை சம்பளம் வழங்கப்படும் என்று சிறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மூங்கில் சேர் செய்த தத்
முன்பு ஏர்வாடா சிறையில் சஞ்சய் தத் இருந்தபோது அவருக்கு மூங்கில் சேர் செய்யும் வேலை அளிக்கப்பட்டது. அவர் செய்த சேர் அவர் ஜாமீனில் வெளியே வந்த பிறகு ஏலத்திற்கு விடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications