சென்னை தியாகராயநகர் வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து… பல கோடி ரூபாய் பொருட்கள் சேதம்
சென்னை: சென்னையில் வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலானது.
சென்னை தியாகராய நகர் ஜி.என் செட்டி சாலையில் உள்ள புகன் டவரில் இன்று மதியம் 12.45 மணிக்கு திடீரென்று தீ பற்றியது. 5 வது மாடியில் பற்றிய தீ மூன்று தளங்களுக்கு பரவியது. ஏசியில் ஏற்பட்ட மின்கசிவினால் தீவிபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
உடனடியாக வந்த தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாக தீயணைப்புத்துறை அதிகாரி கார்த்திக்கேயன் தகவல் தெரிவித்தார்.
மூன்றாவது தளத்தில் உள்ள மென்பொருள் தயாரிப்பு நிறுவனம் முற்றிலும் சேதமடைந்துள்ளது. தீ அணைக்கப்பட்டாலும் புகையினால் வணிக வளாகத்தில் இருந்தவர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. அவர்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
தீ விபத்தினால் பொருட்சேதம் அதிகம் இருக்கும் என்று கூறப்படும் நிலையில் உயிர் சேதம் எதுவும் இல்லை என்று கூறப்படுகிறது.
-
4 மணி நேர மின்வெட்டு.. சென்னை ஆவடியில் கொந்தளித்த மக்கள்! சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு! -
பெங்களூரு, மும்பை எல்லாம் ஓரம் போ.. சம்பள உயர்வு அதிகம் கொடுப்பதில் இந்த சிட்டிதான் டாப்! -
சர்க்கரை அட்டை உங்களிடம் இருக்கா? சென்னை மக்களுக்கு ஒரே நாளில் பெயர் மாற்றத் தீர்வு தரும் தமிழக அரசு -
பெங்களூருக்கு வேட்டு! இந்தியாவிலேயே அதிக சம்பள உயர்வு கிடைக்கும் நகரம் எது தெரியுமா? -
டெல்லி தமிழ்நாடு இல்ல கேண்டீனில் தீ விபத்து.. முதல்வர் விஜய் புறப்பட்ட சிறிது நேரத்தில் பரபரப்பு -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications