பழிவாங்கும் காங்கிரஸே... முடிந்தால் இங்கு ஜனாதிபதி ஆட்சியை அமல் படுத்துங்கள்: மம்தா சவால்

மேற்கு வங்க ஹௌரா நாடாளுமன்ற தொகுதியில் விரைவில் இடைத்தேர்தல் நடை பெற உள்ளது. இதற்காக திரிணாமுல் காங்கிரசின் தலைவரும், முதலமைச்சருமான மம்தா பானர்ஜி அங்கு பிரச்சாரத்தில் உள்ளார்.
பிரச்சாரத்தில் மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்து மம்தா கூறிய கருத்துக்களாவன:-
மத்திய அரசு மேற்கு வங்க மாநிலத்திற்கு தேவையான நிதியை ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டி வருகிறது. எங்களுக்கு எதிராக சி.பி.ஐ-யை ஏவி விட்டு மிரட்டல் விடுத்து வருகிறது. ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலிருந்து நாங்கள் வெளியேறிய பிறகு எங்கள் மீது பழிவாங்கும் போக்கை காங்கிரஸ் கூட்டணி அரசு கடைபிடித்து வருகிறது.
எனது அரசுக்கு எதிராக காங்கிரசும், சி.பி.ஐ-எம் கைகோர்த்து செயல்படுகிறார்கள். ஆனால் அவர்களின் சதித்திட்டம் செல்லுபடியாகது. கடந்த 34 வருடங்களாக நான் மிரட்டப்பட்டு வருகிறேன்.
முடிந்தால் நீங்கள் ஆர்டிக்கள் 356 பயன்படுத்தி ஜனாதிபதி ஆட்சி கொண்டு வந்து பாருங்கள். ஆனால் அவர்களின் சதித்திட்டத்தை நாங்கள் முறியடிப்போம்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி இரண்டு முறை நாட்டை ஆண்டு இருக்கலாம். ஆனால் மூன்றாவது முறையாக அவர்கள் நாட்டை ஆள விடமாட்டோம்' என இவ்வாறு மம்தா தெரிவித்தார்.
-
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
"எங்களை பாஜக கொல்ல பார்க்கிறது.." வங்கத்தை அதிர வைத்த மம்தாவின் குரல்.. உச்சக்கட்ட பதற்றம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
உட்கட்சி பூசலால் திணறும் மம்தா.. முக்கிய மீட்டிங்குக்கு ஆப்சென்ட் ஆன பாதி எம்எல்ஏக்கள்! TMC கதை ஓவர்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications