நில மோசடி.. சென்னையில் சசிகலா அண்ணன் மகன் டாக்டர் வெங்கடேஷ் திடீர் கைது!
சென்னை: நில மோசடி வழக்கில் அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையின் முன்னாள் செயலாளரும் சசிகலாவின் அண்ணன் மகனுமான டாக்டர் வெங்கடேஷ் சென்னையில் இன்று திடீரென கைது செய்யப்பட்டுள்ளார்.
முதல்வர் ஜெயலலிதாவின் உடன்பிறவா சகோதரி சசிகலாவின் அண்ணன் சுந்தரவதனனின் மகன்தான் டாக்டர் வெங்கடேஷ். இவர் அதிமுகவில் ஒரு கட்டத்தில் கோலோச்சி வந்தார். அதிமுகவின் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் பொறுப்பில் இருந்து வந்தார். பின்னர் அவர் அப்பதவியை ராஜினாமா செய்ய நேரிட்டது. அப்படியே அதிமுகவில் ஓரமும் கட்டப்பட்டார். சசிகலா கட்சியை விட்டு நீக்கப்பட்டதாக ஜெயலலிதா அறிவித்த போது டாக்டர் எஸ்.வெங்கடேஷ் பெயரும் இடம் பெற்றிருந்தது.
இந்நிலையில் நில மோசடி புகார் தொடர்பாக சென்னை அடையாறில் இருந்த டாக்டர் வெங்கடேஷை தஞ்சாவூர் போலீசார் திடீரென இன்று கைது செய்தனர். சசிகலாவின் உறவினர் ஒருவர் திடீரென கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்ப்டுத்தியுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications