ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை வீடியோகான்பரன்சிங் மூலம் தொடங்கி வைத்தார் ஜெ.
சென்னை: ரூ1928 கோடி மதிப்பிலான தர்மபுரி ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து வீடியோகான்பரன்சிங் மூலம் தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று தொடங்கி வைத்தார்.
ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்துக்கு வழிகாட்டியாக இருந்தவர் 1982ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த தர்மபுரி- கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியராக இருந்த சீனிவாசன்தான். அதன் பின்னர் எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்தில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் ஆய்வுக்குட்படுத்தப்பட்டது. 1987 ஆம் ஆண்டு பிப்ரவரி 12ந் தேதி தர்மபுரி மாவட்ட ஆட்சியர் பாலகிருஷ்ணன் மாவட்ட ஆட்சியராக இருக்கும்போது ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்திற்கு எம்.ஜி.ஆர் அடிக்கல் நாட்டினார். பின்னர் நீண்டகாலம் இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது. 1991-96ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக் காலத்தில் ரூ350 கோடிக்கு இத்திட்டம் திட்டமிடப்பட்டது.
1998ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்காலத்தில் ஜப்பான் நிதி உதவியுடன் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை செயல்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் பொக்ரான் அணுகுண்டு சோதனையைத் தொடர்ந்து ஜப்பான் நிதி உதவி கிடைக்காமல் இத்திட்டம் மீண்டும் கிடப்பில் போனது. 2006-ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்காலத்தில் மீண்டும் ஒகேனக்கல் கூட்டுகுடிநீர் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்காக 5 கட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மீண்டும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. 2011-ல் அதிமுக ஆட்சி அமைந்தது. இதைத் தொடர்ந்து ஒகேனக்கல் குடிநீர் திட்டப் பணிகள் விரைவுபடுத்தப்பட்டு தற்போது தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
ரூ1928 கோடி மதிப்பிலான இத்திட்டத்தின் தொடக்க விழா தர்மபுரி அம்பேத்கர் நகரில் நடைபெற்றது. சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று முதலமைச்சர் ஜெயலலிதா வீடியோ கான்பரன்சிங் மூலம் இத்திட்டத்தை தொடங்கி வைத்தார். அப்போது பேசிய முதல்வர் ஜெயலலிதா, ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் தொடங்கியது பற்றியும் அதற்கான எதிர்ப்புகளைப் பற்றியும் தமிழக அரசின் உறுதியான நிலைப்பாட்டையும் விவரித்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications