குடும்ப பிரச்சனையால் மனமுடைந்து தூக்கில் தொங்கிய கல்லூரி பேராசியர்
காரைக்கால்: பண்டித ஜவஹர்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய உதவி பேராசிரியர் குமார் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மாணவர்கள் மத்தியல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில், திருநள்ளாற்றை அடுத்த செருமாவிலங்கையில் பண்டித ஜவஹர்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் இயங்கி வருகின்றது. இதில், பாகூரைச் சேர்ந்தவர் குமார் (39) என்பவர் உதவி பேராசிரியாக பணியாற்றி வருகின்றார்.
இவர் கோவையைச் சேர்ந்த நிர்மலா (29) என்ற பென்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளது. இந்த நிலையில், குமாருக்கும், நிர்மலாவிற்கு கடந்த சில மாதங்களாக, அடிக்கடி குடும்ப சண்டை ஏற்பட்டு வந்துள்ளது.
இந்த நிலையில், நேற்று குமார் தனது வீட்டின் ஒரு அறைக்கு சென்று தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவல் அறிந்த திருநள்ளாறு போலீசார் குமாரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications