தேமுதிகவில் மீண்டும் கலகம்.. ஜெ.வை சந்தித்தார் மற்றொரு எம்.எல்.ஏ. சேந்தமங்கலம் சாந்தி!
சென்னை: ஓய்ந்திருந்த தேமுதிக எம்.எல்.ஏக்களின் கலகக் குரல் மீண்டும் வெடித்திருக்கிறது. சேந்தமங்கலம் தொகுதி தேமுதிக எம்.எல்.ஏ. சாந்தி இன்று தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து தொகுதி மக்களின் பிரச்சனைக்காக மனு கொடுத்தார்.
சட்டசபை தேர்தலில் அதிமுக அணியில் இடம் பெற்று தேர்தலை சந்தித்தது தேமுதிக. இதன் மூலம் 29 எம்.எல்.ஏக்களைப் பெற்றது அந்த கட்சி. பின்னர் சிறிது காலத்திலேயே அதிமுகவுடன் மோதல் ஏற்பட்டு கூட்டணியை விட்டு வெளியேறியது. பின்னர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அக்கட்சியில் பெரும் அதிருப்தி வெடித்தது. அக்கட்சியின் மதுரை சுந்தரராஜன், திட்டக்குடி தமிழழகன்,மைக்கேல் ராயப்பன், அருண்பாண்டியன் ஆகிய எம்.எல்.ஏக்கள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை திடீரென சந்தித்துப் பேசினர். அவர்களைத் தொடர்ந்து செங்கம் எம்.எல்.ஏவும் விஜயகாந்த் தலைமைக்கு எதிர்ப்பு தெரிவித்தார். இந்த 5 எம்.எல்.ஏக்களுக்கும் சட்டசபையில் தனி இடமும் ஒதுக்கப்பட்டிருந்தது.

அத்துடன் அதிருப்தி எம்.எல்.ஏக்களுக்கும் தேமுதிக எம்.எல்.ஏக்களும் சட்டசபையில் பெரும் மோதலே நடந்தது. இதில் 6 விஜயகாந்த் ஆதரவு தேமுதிக எம்.எல்.ஏக்கள் 6 மாத காலத்துக்கு சட்டசபையில் இருந்து சஸ்பென்ட் செய்யபட்டிருக்கின்றனர். இதனால் தேமுதிகவின் பலம் 18 எம்.எல்.ஏக்களானது. இதனால் ராஜ்யசபா தேர்தலை எப்படி எதிர்கொள்வது என்று அந்த கட்சி குழம்பிப் போயுள்ளது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக ஓய்ந்திருந்த இந்த அணி தாவும் படலம் தற்போது மீண்டும் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது.
சேந்தமங்கலம் தொகுதியைச் சேர்ந்த தேமுதிக எம்.எல்.ஏ. சாந்தி திடீரென இன்று தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பின் போது 3வது ஆண்டில் அடி எடுத்து வைக்கும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டதாகவும் தமது தொகுதியின் பிரச்சனைகளுக்காக முதல்வரிடம் மனு கொடுத்ததாகவும் அவர் கூறினார்.

இன்று முதல்வர் ஜெயலலிதாவை சாந்தி சந்தித்திருப்பதன் மூலம் தேமுதிக அதிருப்தி எம்.எல்.ஏக்களின் பலம் 6ஆக அதிகரித்துள்ளது. சட்டசபையில் விஜயகாந்த் ஆதரவு எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 17ஆகக் குறைந்துள்ளது.
ஆக மீண்டும் தேமுதிக கூடாராத்தில் கலகக் குரல்!
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications