வாரிசு வந்ததும் தம்பதிகளின் வாழ்க்கையில் விரிசல் விழுகிறதாம்: நிபுணர்கள் தகவல்
லண்டன்: குழந்தை பிறப்பு என்பது எவ்வளவு சந்தோஷமான விஷயம். அழகான ரோஜாப் பூ போல ஒரு குழந்தையை டாக்டர்கள் நம்மிடம் கொடுக்கும்போது மனசு பூரித்துப் போகும் அந்த நிமிடத்தின் மகிழ்ச்சியை விவரிக்க வார்த்தைகளே கிடையாது. ஆனால் அந்தக் குழந்தை பிறப்பானது, தம்பதியினரிடம் தாம்பத்ய வாழ்க்கையை கிட்டத்தட்ட முடிவுக்குக் கொண்டு வந்து விடுவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
முதல் குழந்தை பிறக்கும் வரைதான் ஒரு கணவன், மனைவிக்கிடையே அன்னியோன்யம் மிக அதிகமாக இருக்கிறது. ஆனால் முதல் குழந்தை பிறந்த பிறகு அந்த அன்னியோன்யத்தில் பெரும் விரிசல் விழுவதாக நிபுணர்கள் கூறுகிறார்கள்.
முதல் குழந்தை பிறப்பதற்கு முன்பு காட்டிய காதலும், அன்பும், நெருக்கமும், குழந்தைப் பேறுக்குப் பிறகு குறைந்து விடுகிறது அல்லது காணாமல் போய்விடுகிறது என்பதே இவர்களின் கருத்தாகும்.
குழந்தைப் பிறப்பு என்பதை தாம்பத்யத்திற்கு ஆபத்தாக வந்து சேரும் பூகம்பம் என்றும் நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.

முதல் குழந்தையோடு உறவுக்கு வேட்டு
முதல் குழந்தைக்குப் பின்னர் தங்களது அன்னியோன்யம் குறைந்து போய் விடுவதாக பல இளம் பெற்றோர் கூறியுள்ளனர்.

மூன்றில் 2 பேர்
முதல் குழந்தைக்குப் பிறகு தங்களிடையே முன்பு போல உறவு இருப்பதில்லை என்று மூன்றில் 2 இளம் பெற்றோர் கூறுகிறார்கள்.

ரொமான்ஸ் போச்சு
முதல் குழந்தைக்குப் பின்னர் தங்களிடையே ரொமான்ஸ் குறைந்து விடுவதாகவும், பல நேரங்களில் குழந்தை குறித்தும், எதிர்காலம் குறித்துமே தாங்கள் சிந்திப்பதாகவும் ரொமான்ஸுக்கு நேரம் ஒதுக்க முடியாத நிலை ஏற்படுவதாகவும் பல பெற்றோர்கள் கூறினர்.

ஈர்ப்பு இல்லை
இதுதொடர்பாக நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் கலந்து கொண்டவர்களில் 40 சதவீதம் பேர் தங்களிடையே முன்பு போல செக்ஸ் ஈர்ப்பு இருப்பதில்லை என்றும் தெரி்வித்துள்ளனர்.

அவங்கதான் ரெடியா இல்லை
அதேசமயம், ஆண்களிடம் ஈர்ப்புத்தன்மை முழுமையாக போக்வில்லை என்றும் அவர்கள் ஓரளவு ஆக்டிவாக இருப்பதாகவும், அவர்களின் மனைவியர்தான் முன்பு போல இருப்பதில்லை என்றும் இந்த கருத்துக் கணிப்பின் முடிவு தெரிவித்துள்ளதாம்.

தனிமை வேண்டும்
பல இளம் பெற்றோர்களுக்கு, குழந்தைகளை யாரிடமாவது விட்டு விட்டு கொஞ்சமாச்சும் தனிமையில் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்களாம்.

தாம்பத்யத்தில் பூகம்பம்
குழந்தை பிறகு ஏற்படும் இந்த வெற்றிடத்தை கிட்டத்தட்ட ஒரு பூகம்பத்திற்குச் சமமாக பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

சண்டை வருகிறது
குழந்தைப் பேறுக்குப் பின்னர் ஏற்படும் இந்தஇடைவெளியால் தங்களுக்குள் அடிக்கடி சின்னச் சி்ன்ன சண்டை வருகிறது என்பதும் கருத்து தெரிவித்தோர் பலரின் கூற்றாக இருந்தது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications