வந்தாச்சு நானோ ஊசிகள்: இனி நேரடியா செல்லுலயே ஊசி போடலாமாம்
நார்வே: தம்மத்தூண்டு ஊசி... இதை வைத்து நார்வே ஆய்வாளர்கள் ஒரு பெரிய மாயாஜாலத்தை நிகழ்த்தியுள்ளனர். அதாவது மிக மிக நுண்ணிய நீடில்கள் மூலம் மருந்துகளை நேரடியாக செல்களுக்குள் செலுத்தும் முறை இது.
இதைக் கேட்கவே ஆச்சரியமாக இருக்கிறது. இந்த ஊசியால் அவர்கள் செய்துள்ள அற்புதம் மருத்துவ உலகுக்குப் பெரும் வரப்பிரசாதமாக வந்துள்ளது.
இந்த ஆய்வானது மருத்துவ உலகில் மிகப் பெரிய மைல் கல்லாக அமையும் என்றும் நார்வே ஆய்வாளர்கள் நம்பிக்கையுடன் கூறுகின்றனர்.

குட்டி குட்டி நீடில்கள்
மிக மிகச் சிறிய சைஸ் நீடில்களை உருவாக்கியுள்ளனர் நார்வே ஆய்வாளர்கள். இந்த நீடில்கள் மூலம் செலுத்தப்படும் மருந்துகள், செல்களுக்குள் எளிதில் புகும்.

மறுத்தாலும் விடாது
அந்த செல்கள், ஒரு வேளை மருந்துகளை ஏற்க மறுத்தாலும் கூட இந்த நீடில்கள் மிக மிக நுணுக்கமாக மருந்துகளை செல்களுக்குள் செலுத்தி விடும் சாமர்த்தியம் நிரம்பியது என்பதுதான் இதில் விசேஷம்.

மருந்து செலுத்துவது ஈசி
செல்களுக்குள் மருந்துகளை செலுத்துவதில் உள்ள சிரமங்களைப் போக்கும் வகையில் இந்த நீடில்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

நார்வே குழு
நார்வேயைச் சேர்ந்த இயற்பியலாளர் பாவல் சிகோர்ஸ்கியும் அவரது குழுவினரும்தான் இந்த நீடில்களை உருவாக்கியுள்ளனர். இவர்கள் நார்வே அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர்கள் .

நானோ நீடில்கள்
இவர்கள் உருவாக்கியுள்ள இந்த நானோ - நீடில்கள் மூலம் மருந்துகளை செல்களுக்குள் முழுமையாக செலுத்த முடியுமாம். இது மிகவும் கடினமான வேலையாச்சே என்று கூறலாம். ஆனால் இவர்களது நீடில்களுக்கு வேலை மிகவும் எளிதாக உள்ளது.

எந்த செல்லாக இருந்தாலும் சரி
அதாவது எந்த மாதிரியான செல்களாக இருந்தாலும், மருந்துகளையே ஏற்காமல் நிராகரிக்கும் தன்மையுடன் கூடிய செல்களாக இருந்தாலும் சரி, இந்த நானோ நீடில்கள் மிகவும் எளிதாக செல்களுக்குள் கொண்டு போய் மருந்துகளை விட்டு விடக்கூடிய திறமையானவை.

அடுத்த கட்ட ஆய்வு
நுண்ணோக்கி மூலம் இதைச் செய்து காட்டியுள்ளனர் நார்வே விஞ்ஞானிகள். தற்போது அடுத்த கட்ட மேம்பாட்டு ஆய்வில் இந்த ஆய்வுக் குழு முனைப்பு காட்டி வருகிறது.

சாதாரண ஊசி போடுவது போல
இதுகுறித்து பாவல் கூறுகையில், மருத்துவ ஆய்வில் இது மிகவும் மேம்பட்ட ஒரு விஷயம். இந்த நீடில்கள் பெரும் வரப் பிரசாதமாக அமையும் வாய்ப்புள்ளது. இந்த நீடில்கள் மூலம் மருந்து செலுத்துவது என்பது மிகவும் எளிதானதும் கூட. அதாவது நானோ நீடில்களின் நுனியில் மருந்தை வைத்து விட்டு, சாதாரணமாக ஊசி போடுவது போலவே இதை செலுத்தலாம்.அதாவது சாதாரண சிரிஞ்சுகள் மூலம் நமது உடலில் இந்த மருந்துகளை செலுத்த வேண்டும். செலுத்தப்படும் மருந்தை இந்த நானோ நீடிலானது, நமது செல்களுக்குள் செலுத்தி விடும் வேலையைச் செய்து விடுகிறது என்றார் பாவல்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications