இவர் பைத்தியக்காரன்... இல்லை, அவர்தான் பைத்தியம்... சேலம் மாநகராட்சியில் மேயர், கவுன்சிலர் 'சண்டை'!

Subscribe to Oneindia Tamil

சேலம்: சேலம் மாநகராட்சிக் கூட்டத்தில் மேயர் சவுண்டப்பன் தன்னை பைத்தியக்காரன் என்று கூறி திட்டியதால் கோபமடைந்த அதிமுக கவுன்சிலர் ஜெயக்குமார் வெளிநடப்பு செய்தார்.

சேலம் மாநகராட்சி மாமன்றக் கூட்டம் நடந்தது. அதில் கலந்து கொண்டு பல்வேறு கவுன்சிலர்களும் பேசியபடி இருந்தனர். திமுக கவுன்சிலர் புவனேஸ்வரி அம்மா உணவகம் குறித்துப் பேசியபோது திமுகவினருக்கும், அதிமுக கவுன்சிலர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் மூண்டது.

அப்போது அதிமுக கவுன்சிலர் ஜெயக்குமார் பேச எழுந்தபோது அப்புறம் நான் சொல்லும்போது பேசு என்று கூறி அமரச் சொன்னார் மேயர் சவுண்டப்பன்.இதனால் அமர்ந்தார் ஜெயக்குமார். இருப்பினும் அவரை பேச அனுமதிக்காமலேயே இருந்தார் மேயர்.

இந்த நிலையில் அதிமுகவைச் சேர்ந்த அனுராதா பேச வாய்ப்புக் கேட்டபோது அதை உடனே அனுமதித்தார் சவுண்டப்பன். இதைப் பார்த்த ஜெயக்குமார் கோபமடைந்து வேகமாக எழுந்தார். எப்போது பார்த்தாலும், உட்காரு... அப்புறமா பேசு, இதையேத்தான் சொல்றீங்க. என் வார்டில், ஆயிரம் பிரச்னை இருக்குது. அத நான் எப்ப பேசுறது. தண்ணி வந்து, 30 நாட்களுக்கு மேலாச்சு என்று கோபமாக பேசினார்.

இதைப் பார்த்த சவுண்டப்பன், உடனே பத்திரிக்கை நிருபர்கள் இருந்த பகுதிப் பக்கம் வேகமாக திரும்பி, இந்த கவுன்சிலருக்கு மனநிலை சரியில்லை, பைத்தியக்காரன். தனால் தான் மன்ற கூட்டத்தில் இப்படி பேசுகிறார். பத்திரிகைகாரர்கள் யாரும் அதை பெரிதாக எடுத்து கொள்ள வேண்டாம் என்றார்.

இதைக்கேட்டு மேலம் ஆத்திரமடைந்த ஜெயக்குமார் வேகமாக வெளிநடப்புச் செய்தார். பின்னர் வெளியே வந்த அவர் செய்தியாளர்களிடம் நான் நன்றாகத்தான் இருக்கிறேன். இந்த மேயர்தான் பைத்தியக்காரன் என்று சரமாரியாக குற்றம் சாட்டிப் பேசினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+