தமிழக மக்கள் தொகை 7.2 கோடியாக அதிகரிப்பு: கல்வியறிவு பெற்றோர் எண்ணிக்கை 80.1%
சென்னை: தமிழக மக்கள் தொகை 7.2 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் மக்கள் தொகை சுமார் 97.4 லட்சம் அதிகரித்துள்ளது. அதே போல தமிழகத்தில் கல்வியறிவு பெற்றவர்களின் எண்ணிக்கை 80.1 சதவீதமாக உயர்ந்துள்ளது.
மத்திய சென்சஸ் துறையின் தமிழக இணை இயக்குனர் கிருஷ்ணா ராவ் 2011ம் ஆண்டு சென்சஸ் முடிவுகளை இன்று வெளியிட்டார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

பெண்கள்- ஆண்கள் சம அளவில்:
2011ம் ஆண்டு மார்ச் வரையிலான கணக்கெடுப்பின்படி தமிழக மக்கள் தொகை 7.2 கோடியாகும். இதில் பெண்கள் 3.6 கோடி பேர். ஆண்கள் 3.6 கோடி பேர்.

கிராமப்புறங்களில் 3.7 கோடி, நகர்ப்புறங்களில் 3.49 கோடி:
மொத்த மக்கள் தொகையில் கிராமப்புறங்களில் வசிப்போர் 3.7 கோடி பேர். நகர்ப்புறங்களில் வசிப்போர் 3.49 கோடி பேர். கடந்த 10 ஆண்டுகளில் நகர்ப்புறங்களில் வசிப்போர் எண்ணிக்கை 74 லட்சம் உயர்ந்துள்ளது. கிராமப் பகுதிகளில் வசிப்போர் எண்ணிக்கை 23 லட்சம் மட்டுமே அதிகரித்துள்ளது.

மக்கள் தொகை 15.6% அதிகரிப்பு:
2001 முதல் 2011 வரையிலான 10 ஆண்டுகளில் தமிழக மக்கள் தொகை 15.6 சதவீதம் அதிகரித்துள்ளது. இது முந்தைய 10 ஆண்டுகளில் (1991 முதல் 2001 வரை) 11.7 சதவீதமாகவே இருந்தது.
(2001-2011ம் ஆண்டில் நாட்டின் ஒட்டுமொத்த மக்கள் தொகை வளர்ச்சி 17.7 சதவீகமாக இருந்தது குறிப்பிடத்தக்கது)

மக்கள் தொலை வளர்ச்சியில் காஞ்சிபுரம் முதலிடம்:
தமிழகத்திலேயே சென்னையை ஒட்டிய காஞ்சிபுரம் மாவட்ட மக்கள் தொகை தான் கடந்த 10 ஆண்டுகளில் மிக அதிகமாக 39 சதவீதம் அதிகரித்துள்ளது. சென்னையைச் சேர்ந்தோர், சென்னையில் பணிபுரிவோர் ரியல் எஸ்டேட் விலை காரணமாக காஞ்சிபுரத்தில் குடியேறுவது அதிகரித்து வருவதே இதற்குக் காரணம்.
சென்னையில் ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 26,553 பேர் வசிக்கின்றனர். இது மிக அதிகமான மக்கள் நெரிசலாகும்.

பெண் குழந்தைகள் எண்ணிக்கை:
பெண் குழந்தைகளின் எண்ணிக்கையும் மாநிலத்தில் அதிகரித்து வருகிறது. 6 வயதுக்குக் குறைவான பெண் குழந்தைகளின் எண்ணிக்கையில் நீலகிரி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, திருநெல்வேலி, புதுக்கோட்டை மாநிலங்கள் முன்னிலையில் உள்ளன. இந்த மாவட்டங்களில் 1000 ஆண் குழந்தைகளுக்கு 960 முதல் 985 பெண் குழந்தைகள் உள்ளனர்.

கடலூர், அரியலூர், பெரம்பலூர், தர்மபுரி, நாமக்கல், சேலத்தில் குறைவு:
அதே நேரத்தில் கடலூர், அரியலூர், பெரம்பலூர், தர்மபுரி, நாமக்கல், சேலம் மாவட்டங்களின் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இந்த மாவட்டங்களில் 1000 ஆண் குழந்தைகளுக்கு 896 முதல் 916 வரையே பெண் குழந்தைகள் உள்ளனர்.

கல்வியறிவு பெற்றவர்களின் எண்ணிக்கை 80.1%:
தமிழகத்தில் கல்வியறிவு பெற்றவர்களின் எண்ணிக்கை 80.1 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது கடந்த 10 ஆண்டுகளில் 6.6 சதவீத வளர்ச்சியாகும் (நாடு முழுவதும் கடந்த 10 ஆண்டுகளில் கல்வியறிவு பெற்றவர்களின் எண்ணிக்கை 8.2 சதவீதம் அதிகரித்துள்ளது).

கல்வியறிவில் முன்னணி- பின் தங்கிய மாவட்டங்கள்:
கன்னியாகுமரி, சென்னை, தூத்துக்குடி, நீலகிரி, காஞ்சிபுரம் மாவட்டங்கள் தான் படிப்பறிவில் முன்னணியில் உள்ளன. இங்கு கல்வியறிவு பெற்றவர்களின் எண்ணிக்கை 84.5% முதல் 91.7% ஆக உள்ளது.
அதே நேரத்தில் தர்மபுரி, அரியலூர், கிருஷ்ணகிரி, விழுப்புரம், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் எழுதப் படிக்கத் தெரிந்தவர்களின் எண்ணிக்கை 68.5% முதல் 72.6%க்குள் தான் உள்ளது.
-
அம்மா சென்டிமென்ட்.. அறுக்காதீங்க லாரன்ஸ்! கொந்தளித்த ப்ளூ சட்டை மாறன்! சரமாரி விமர்சனம் -
திருவள்ளூர் முட்புதரில் 3 வயது குழந்தை... ஒரே நாளில் 5 சிறுமிகளுக்கு கொடுமை! சிங்கப்பெண் படை எங்கே? -
குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க என்ன நடவடிக்கை?.. தமிழக அரசுக்கு அண்ணாமலை சரமாரி கேள்வி -
தமிழ்நாட்டின் கஜானா காலியா? நிதி நிலை என்ன? இன்று மாலை வெளியாகிறது வெள்ளை அறிக்கை -
ஓமன் அருகே கப்பலில் உயிரிழந்த தமிழக மாலுமி.. குளிர்ந்த நீரால் உடலை பாதுகாக்க போராடும் சக ஊழியர்கள் -
கரண்ட் கட்.. போராட்டமாக மாறிய பொதுக்கூட்ட மேடை! சூடான திமுகவினர்! சென்னையில் சலசலப்பு! -
கரண்ட் கட் பற்றி நான் சொன்ன விஷயத்தில் பின்வாங்க மாட்டேன்.. ஏனென்றால்..? மாஸ்டர் மகேந்திரன் விளக்கம் -
சுழல்கள் நிறைந்த சாலக்குடி ஆற்றின் பாறை இடுக்கில் சிக்கிய தமிழக இளைஞர்! கயிறு கட்டி மீட்ட ராணுவ வீரர்! -
கரண்ட் பில் கட்ட கடைசி தேதி முடிஞ்சுடுச்சா? பதறாதீங்க.. இனிமேல் இப்படி ஒரு வசதி இருக்கு! -
சென்னையில் சம்பவம் இருக்கு.. ஹை அலர்ட் கொடுத்த வானிலை மையம்! உஷார் மக்களே! -
செங்கல்பட்டு-திண்டிவனம் 6 வழிச்சாலை விரிவாக்கம்: NHAI அதிரடி திட்டம் - போக்குவரத்து நெரிசல் ஓவர்! -
கள உதவியாளர் தேர்வு: இனி 'ஷூ' அணிந்து கம்பம் ஏறலாம்! மின்வாரியத்தின் புதிய விதிகள்!












Click it and Unblock the Notifications