சத்தீஸ்கர் மாவோயிஸ்டுகள் தாக்குதலுக்கு காங். மூத்த தலைவர் அஜித்ஜோகி உடந்தை- ம.பி. பாஜக புகார்!
போபால்: சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர்களை இலக்கு வைத்து மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலுக்கு அம்மாநில முன்னாள் முதல்வர் அஜித் ஜோகி உடந்தை என்று மத்திய பிரதேச பாஜக பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் மே 25-ந் தேதியன்று மாவோயிஸ்டுகள் நடத்திய பெரும் தாக்குதலில் அம்மாநிலத்தின் மூன்று மூத்த காங்கிரஸ் தலைவர்கள் உட்பட 28 படுகொலை செய்யப்பட்டனர். இந்தப் படுகொலைக்கு காங்கிரஸின் ஒரு பிரிவினர்தான் காரணம் என்று படுகொலை செய்யப்பட்ட மூத்த காங்கிரஸ் தலைவர் மகேந்திர கர்மாவின் மகன் குற்றம்சாட்டியிருந்தார்.
இந்த நிலையில் மத்திய இரதேச மாநில செய்ற்குழுக் கூட்டத்தில் பேசிய் அம்மாநில பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் நரேந்திர சிங் டோமர், பாஜகவின் தேசிய செயலர் அனந்த் குமார், மாநில முதல்வர் சிவ்ராஜ்சிங் செளகான் ஆகியோர் அனைவரும் பகிரங்கமாக சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் அஜித் ஜோகிதான் மாவோயிஸ்டுகளின் தாக்குதலுக்கு உடந்தை என குற்றம்சாட்டினர். அம்மாநிலத்தின் மூன்று முக்கிய காங்கிரஸ் தலைவர்கள் கொல்லப்பட்டதால்தான் தாம் இந்த சந்தேகத்தை கிளப்பியிருப்பதாக நரேந்திர சிங் டோமர் கூறினார். மேலும் சத்தீஸ்கர் மாநிலம் பிரிக்கப்படாத நிலையில் ஒருங்கிணைந்த மத்திய பிரதேச சட்டசபையில் தாம் மகேந்திர கர்மாவுடன் இணைந்து பணியாற்றியதையும் அவர் நினைவு கூர்ந்தார்.
இந்தக் கூட்டத்தில் பேசிய அனந்த்குமார், சத்தீஸ்கர் மாவோயிஸ்டுகளுக்கு காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலர் திக்விஜய் சிங், அஜித் ஜோகி ஆகியோர்தான் ஆதரவு. 2010ஆம் ஆண்டு மாவோயிஸ்டுகள் 76 சி.ஆர்.பி.எப். வீரர்களை தண்டேவடாவில் படுகொலை செய்தபோது அவர்களை அப்போதைய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், அவர்களை பயங்கரவாதிகளுடன் ஒப்பிட்டிருந்தார். ஆனால் ஜோகியும் திக்விஜய்சிங்கும் கொடுத்த அழுத்தத்தினால் அந்த வார்த்தைகளை முழுங்கிவிட்டார் ப.சிதம்பரம் என்றார்.
-
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன்












Click it and Unblock the Notifications