கருணாநிதி பிறந்த நாள்... முக ஸ்டாலின் இன்று ரத்த தானம்!

அவரது தலைமையில் ஏராளமான தொண்டர்கள் ரத்த தானம் வழங்கினர்.
தி.மு.க. தலைவர் கருணாநிதியின் 90-வது பிறந்த தினம் ஜூன் 3-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி தென்சென்னை மாவட்ட தி.மு.க. இளைஞரணி சார்பில் இன்று ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. திடலில் ரத்த தான முகாம் நடத்தப்பட்டது.
இந்த முகாமை தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பின்னர் தானும் ரத்தம் வழங்கினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், " தி.மு.க. தலைவர் கருணாநிதியின் பிறந்தநாள் 3 மாதங்கள் கொண்டாடப்படும். விழாவையொட்டி ரத்த தானம், கண் தானம், அன்னதானம், ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் எனப் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படும்," என்றார்.
மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சிற்றரசு துணை அமைப்பாளர்கள் கே.கே.நகர் ஏ.எம்.வி. பிரபாகர்ராஜா, ஆனந்தம், நுங்கை சுரேஷ், வடிவேல், எம்.கே.ஆனந்த் உள்பட 100 பேர் ரத்த தானம் வழங்கினார்கள்.
நிகழ்ச்சியில் மாவட்டச் செயலாளர் ஜெ.அன்பழகன், இளைஞரணி மாநில துணை செயலாளர் மா.சுப்பிரமணியன், பகுதி செய லாளர்கள் மதன்மோகன், மா.பா.அன்புதுரை, வி.எஸ்.ராஜ், அகஸ்டின்பாபு உள்பட ஏராளமான கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
ராயப்பேட்டை மைதானத்தில் 3-ந்தேதி மாலை 6 மணிக்கு நடைபெறும் கலைஞர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தை மிகப் பிரம்மாண்டமாக நடத்த மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன் ஏற்பாடு செய்துள்ளார்.
இதில் பேராசிரியர் அன்பழகன், கி.வீரமணி, தொல்.திருமாவளவன், காதர் மொய்தீன், ஆர்.எம். வீரப்பன், சுப.வீரபாண்டியன் ஆகியோர் பாராட்டி பேசுகிறார்கள்.
-
மாஸ்டர் பிளான் போட்ட கருணாநிதி.. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செங்கற்களில் அன்று நடத்திய சரித்திரம் -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications