போராட்டக்காரர்களை அடையாளம் காண... முகமூடி விற்பனைக்கு தடை :சீனா
பீஜிங்: சீனாவில் சமீபத்திய போராட்டங்களின் போது முகமூடி அணிந்து பலர் வன்முறையில் ஈடுபட்டதன் விளைவாக, போராட்டக்காரர்களை அடையாளம் காண்பதில் போலீசாருக்கு சிக்கல் ஏற்பட்டது. இதனால், சீனாவில் பிளாஸ்டிக் முகமூடிகள் விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துபவர்கள், போலீசார் தங்களை அடையாளம் காண இயலாத படி முகமூடிகளை அணிந்து வன்முரையில் ஈடுபடுகின்றனர். வேறு சிலரோ கர்சீப்புகளை முகத்தில் கட்டியும், முகத்தில் பெயின்ட் அடித்தும் தங்கள் முகத்தை மறைத்ஹ்டுக் கொள்கின்றனர். இதனால், வன்முறையில் ஈடுபடுபவர்களை அடையாளம் காண்பதில் திணறிப் போகிறார்கள் போலீசார்.
எனவே, குழப்பங்களைத் தடுக்க முகமூடிகள் விற்பனைக்கு சீனாவின் பல நகரங்களில் அதிரடியாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
வரும் ஜூன் 6ம் தேதி முதல், குன்மிங் நகரில் 'தெற்காசிய கண்காட்சி' நடைபெற உள்ளது. மூன்று நாட்கள் நடைபெற இக்கண்காட்சியில், இந்தியா உள்பட பல தெற்காசிய நாடுகள் தங்களின் உற்பத்தி பொருட்களை இங்கு விற்பனைக்கு செய்ய திட்டமிட்டுள்ளன. எனவே, இக்கண்காட்சிக்கு எதிராக போராட்டங்கள் வெடிக்கலாம் என சந்தேகிக்கப் படுகிறது. ஆகவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, முகமூடி விற்பனைக்கு குன்மிங் நகர நிர்வாகம் தடை விதித்துள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த மாதம் பெட்ரோலியம் சுத்திகரிப்பு தொழிற்சாலையால் சுற்றுச்சூழல் பாதிக்கிறது என்று எதிர்ப்பு தெரிவித்து, ஏராளமான மக்கள் முகமூடி அணிந்து வன்முறையில் ஈடுபட்டனர். வன்முறையாளர்களை அடையாளம் காண முடியாததால், போலீசாரால் நடவடிக்கை எடுக்க முடியவில்லை.
அதன் எதிரொலியாகவே, பிளாஸ்டிக் முகமூடி விற்பனைக்கு தடை கொண்டு வரப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் விளக்கம் தெரிவித்துள்ளனர்.
-
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு












Click it and Unblock the Notifications