தமிழ்நாடு கேட்கும் போதெல்லாம் காவிரி நீரை திறந்துவிட முடியாது: கர்நாடக முதல்வர்

கர்நாடக முதல்வர் சித்தராமையா ராய்சூர் மாவட்டத்தில் நேற்று சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
அவர் சிந்தனூரில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை திறந்துவிட மாட்டோம் என்று நாங்கள் ஒருபோதும் கூறியதில்லை. கர்நாடகத்தில் தண்ணீர் பற்றாக்குறையாக இருந்தபோது கூட தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட்டுள்ளோம். எங்களுக்கே தண்ணீர் இல்லாதபோது கேட்டால் எங்களால் திறந்துவிட முடியாது.
காவிரி பகுதியில் கடந்த 2 ஆண்டுகளாக வறட்சி நிலவுவதால் அங்குள்ள நான்கு நீர்த்தேக்கங்களில் தண்ணீர் குறைந்தபட்ச அளவை விட குறைவாக உள்ளது. அதனால் தற்போதைக்கு தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்துவிடும் பேச்சுக்கே இடமில்லை. கர்நாடக மக்களின் குடிநீர் தேவை மற்றும் விவசாயத்திற்கே தண்ணீர் போதிய அளவு இல்லை.
தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு நல்ல பலனைத் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் வறட்சி நிலை இன்னும் சில வாரங்களில் மாறும் என்று எதிர்பார்க்கிறோம். கடந்த 2 நாட்களாக மாநிலத்தில் நல்ல மழை பெய்து வருகிறது. தமிழ்நாடு கேட்கும் போதெல்லாம் தண்ணீர் திறந்துவிட முடியாது என்றார்.
காவிரி நடுவர்மன்ற தீர்ப்பின்படி கர்நாடகா இந்த மாதத்தில் முதல் 20 நாட்களில் 1.2 டிஎம்சி நீரைத் திறந்துவிட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு கர்நாடக அரசை வலியுறுத்தியுள்ளது.
-
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications