ஜெயலலிதா இன்று ஸ்ரீரங்கம் வருகை: புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்

ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதியில் புதிய திட்டப்பணிகள் அடிக்கல் நாட்டு விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஸ்ரீரங்கம் மேலச்சித்திரை வீதி - தெற்கு சித்திரை வீதி சந்திப்பில் இன்று மாலை 5.30 மணிக்கு நடைபெறுகின்றது.
இந்த விழாவுக்கு தமிழக சட்டசபை சபாநாயகர் தனபால் தலைமை தாங்குகிறார். உயர்க் கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன், தொழிற்துறை அமைச்சர் தங்கமணி, கதர்துறை அமைச்சர் பூனாட்சி, அரசு தலைமை கொறடா ஆர்.மனோகரன் எம்.எல்.ஏ ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
இந்த விழாவில் முதல்வர் ஜெயலலிதா கலந்து கொண்டு ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட மொண்டிப்பட்டி ஊராட்சியில் ரூ.1200 கோடி மதிப்பீட்டில் டிஎன்பிஎல் மூலம் அமைக்கப்படும் காகித அட்டை தொழிற்சாலை, ரூ.128 கோடியில் சேதுராப்பட்டியில் அமைய உள்ள இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனம் (ஐஐஐடி), ஸ்ரீரங்கம் அரசு பொறியியல் கல்லூரி, அரசு பாலிடெக்னிக், தோட்டக்கலைத்துறை சார்பில் ரூ.50 லட்சத்தில் தொக்குடியில் அமைக்கப்படும் மூலிகைப் பண்ணை உள்ளிட்ட புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
மேலும் ஸ்ரீரங்கத்தில் அம்மா உணவகம், தேசிய சட்டப்பள்ளி கட்டிடங்கள் உள்ளிட்ட நிறைவு பெற்றுள்ள திட்டப்பணிகளை தொடங்கி வைத்து, நூற்றுக்கணக்கான பயனாளிகளுக்கு அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி பேச உள்ளார்.
இதன் மூலம் ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று முதல்வரான பின்னர் 4வது முறையாக தொகுதியில் நடைபெறும் அரசு விழாவில் முதல்வர் ஜெயலலிதா கலந்து கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications