ஏன் போன் பண்ணலை... 45 வயது கள்ளக்காதலியை கத்தியால் குத்திய 60 வயது முதியவர்!
சென்னை: தனது கள்ளக்காதலி செல்போனில் பேச மறுத்து விட்டதால் கோபமடைந்த 60 வயது முதியவர், கள்ளக்காதலியை கத்தியால் சரமாரியாக குத்தினார்.
சென்னை அருகே திருமுல்லைவாயல் சீனிவாசா நகர் ராகவன் தெருவை சேர்ந்தவர் சாமுண்டீஸ்வரி. 45 வயதானவர். இவரது கணவர் செல்வம் 15 வருடத்திற்கு முன்பே பிரிந்து போய் விட்டார். சாமுண்டீஸ்வரிக்கு பிள்ளை கிடையாது.
இந்தநிலையில் 60 வயதான நடராஜன் என்பவருடன் சாமுண்டீஸ்வரிக்குப் பழக்கம் ஏற்பட்டது.ஆனால் இந்தத் தொடர்பை சமீப காலமாக குறைக்க ஆரம்பித்தார் சாமுண்டீஸ்வரி. நடராஜன் விடாமல் போன் செய்வாராம். போனை எடுக்காமல் விட்டு விடுவாராம் சாமுண்டீஸ்வரி.
இந்த நிலையில் சாமுண்டீஸ்வரியைத் தேடி நடராஜன் நேரிலேயே வந்து விட்டார். ஏன் போனை எடுப்பதில்லை என்று கேட்டு சண்டை பிடித்தார். இதனால் கோபமடைந்த சாமுண்டீஸ்வரி, நடராஜனை திட்டியதாக தெரிகிறது. இதையடுத்து கோபமடைந்த நடராஜன், கத்தியை எடுத்து சாமுண்டீஸ்வரியை சரமாரியாக குத்தியுள்ளார். படுகாயமடைந்து கீழே விழுந்தார் சாமுண்டீஸ்வரி.
இதைப் பார்த்து பொதுமக்கள் ஓடிவரவே நடராஜன் தப்பி ஓடி விட்டார். பொதுமக்கள் சாமண்டீஸ்வரியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. நடராஜன் கைது செய்யப்பட்டார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications