செயற்கைக்கால், கல்யாண மோதிரம், ஐபாட்... இது விமானப் பயணிகள் தவறவிடும் பொருட்களின் ‘அதிர்ச்சி’ தொகுப்
மும்பை: பஸ்சில் போவோர் பஸ்சை விட்டு இறங்கும்போது எதையாவது மறந்து விட்டு விட்டுப் போய் விடுவது சகஜம். அதேபோலத்தான் ரயில் பயணங்களிலும். ஆனால் விமான பயணத்திலும் இதுபோல நிறைய நடக்கிறதாம்.
புத்தகம், பை, கல்யாண மோதிரம் என்று பல தரப்பட்ட பொருட்களை பயணிகள் மறந்து விட்டுப் போய் விடுகிறார்கள். ஒருவர் சமீபத்தில் தனது செயற்கைக் காலையே விட்டு விட்டுப் போய் விட்டாராம்.
பயணிகள் எதையெல்லாம் விட்டு போய் விடுகிறார்கள் என்பது குறித்து சுவாரஸ்யமான தொகுப்பு இது....

ஐபாட் முதல் மூக்குக் கண்ணாடி வரை...
மொபைல் போன்கள், ஐபாட்கள், மூக்குக் கணக்ணாடி, புத்தகம் போன்றவை பெரும்பாலும் மிஸ் ஆகும் பொருட்கள் பட்டியலில் உள்ளன.

அவசரத்துல மறந்துடறாங்கப்பா...
விமானம் தரையிறங்கியதுமே பயணிகள் கீழே இறங்கி ஓடுவதால்தான் இந்தக் குழப்பங்கள் நடப்பதாக விமான நிலையத்தினர் கூறுகின்றனர்.

இதற்கும் ஒரு சர்வே...
பயணிகள் எதையெல்லாம் விட்டு விட்டுப் போகிறார்கள் என்பதை லண்டனைச் சேர்ந்த விர்ஜின் அட்லான்டிக் விமான நிறுவனம் சர்வே எடுத்தது. அதில்தான் பல சுவாரஸ்யமான தகவல்கள் கிடைத்தன.

லிப்ஸ்டிக்க காணோமே...
இந்த சர்வேயில் பயணிகள் அடிக்கடி மிஸ் செய்யும் பொருட்களாக மொபைல் போன்கள், மூக்குக் கண்ணாடி, கேமராக்கள், ஹெட்போன்கள், மேக்கப் சாதனங்கள், கழுத்துக்கு வைத்துக்கொள்ளும் தலையணைகள், சிடிக்கள், புத்தகம் போன்றவை உள்ளதாம்.

அடப்பாவிகளா... பாஸ்போட்டையுமா?
சிலர் பாஸ்போர்ட்டை மறந்து விட்டு விடுகிறார்களாம். அதேபோல ஐபாட், ஐபேட், லேப்டாப் போன்றவற்றையும் மறந்து விடுகிறார்களாம்.

மனைவிகள் ஜாக்கிரதை...
சிலர் திருமண மோதிரத்தையே கூட விட்டு விட்டுப் போய்விடுகிறார்களாம்...

இப்படியும் ஒரு வினோதப் பயணி...
2011ம் ஆண்டு ஒரு பயணி தான் அணிந்திருந்த செயற்கைக் காலையே விமானத்தில் விட்டு விட்டுப் போய் விட்டாராம்...

கால் இல்லாமல் எப்படி...?
இதுகுறித்து விளக்கிய விமான நிறுவன செய்தித் தொடர்பாளர், அந்த பயணி ஓய்வுக்காக தனது காலை கழற்றி வைத்திருக்க வேண்டும். போகும்போது வீல் சேரில் போயிருக்கலாம். அப்போது காலை எடுத்துக்கொள்ள மறந்திருக்கலாம் என்றார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications