டீச்சர் சீண்டுகிறாரா... புகார் பெட்டியில் மனு போடலாம்.. பள்ளி மாணவர்களுக்கு அறிவுரை
திருவனந்தபுரம்: கேரளாவில் மாணவிகளுக்கு ஏற்படும் பாலியல் தொல்லைகளை தடுக்க அனைத்து பள்ளிகளிலும் கேரள போலீஸ் சார்பில் புகார் பெட்டி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
கேரளாவில் சமீப காலமாக பள்ளிகளிலும், வேன், பஸ்களிலும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அதிகரித்து வருகிறது. இதை ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு பயந்து யாரிடம் மாணவிகள் சொல்வதில்லை. இதை பயன்படுத்தி கொண்டு பாலியல் தொந்தரவுகள் அதிகரித்து வருகின்றன. இதுகுறித்து அரசுக்கு ஏராளமான புகார்கள் வந்ததால் இது குறித்து நடவடிக்கை எடுக்க டிஜிபி பாலசுப்பிரமணியத்துக்கு கேரள உள்துறை அமைச்சர் உத்தரவிட்டார்.
இதையடுத்து அனைத்து பள்ளிகளிலும் புகார் தெரிவிக்க புகார் பெட்டி வைக்க டிஜிபி பாலசுப்பிரமணியன் உத்தரவிட்டார். இதன்படி கேரளாவில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் புகார் பெட்டி வைக்கப்பட்டுள்ளது.
வகுப்பறையில் விரும்பதகாத சம்பவம் நடந்தாலும், ஆசிரியர்கள் அடித்தாலும் வேன்களில டிரைவர்கள், கீளினர்கள் பாலியல் தொந்தரவு செய்தாலும் இதுகுறித்து உடனடியாக மாணவிகள் புகாராக எழுதி பெட்டியில் போடலாம். இதன் மேல் ஒரு வாரததிற்குள் நடவடிக்கை எடுக்க.ப்படும் என போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து டிஜிபி தெரிவிக்கையில், மாணவிகளுக்கு எதிராக அதிகரித்து வரும் பாலியல் குற்றங்களை தடுக்கவே பள்ளிகளில் இந்த புகார் பெட்டி வைக்க தீர்மானிக்கப்பட்டது. பெற்றோர், ஆசிரியர்களிடம் சொல்ல தயங்கும் புகார்களை இதில் எழுதி போடலாம். இதன்மேல் ரகசிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மேல் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
-
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் இன்று திறப்பு.. இன்றே மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்க ஏற்பாடு! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications