தேமுதிக முக்கிய நிர்வாகிகள் 15 பேர் ஜெ. முன்னிலையில் இன்று அதிமுகவில் ஐக்கியம்
Subscribe to Oneindia Tamil

தேமுதிக அதிமுகவுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்து 29 எம்.எல்.ஏ.க்களை பெற்றது. ஆனால் தேர்தல் முடிந்த பிறகு அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக வெளியேறியது. இதையடுத்து தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் 5 பேர் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தேமுதிக எம்.எல்.ஏ. சேந்தமங்கலம் சாந்தி முதல்வரை சந்தித்து பேசியதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சந்திப்பிற்கு பிறகு அவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது என்று கூறப்பட்டது.
இந்த சூழலில் மதுரை மாவட்ட தேமுதிக செயலாளர் அரவிந்தன், அக்கட்சியின் மதுரை மாவட்ட துணை செயலாளர், ஒன்றிய செயலாளர் உள்பட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் 15 பேர் ஜெயலலிதா முன்னிலையில் இன்று அதிமுகவில் இணைகிறார்கள்.












Click it and Unblock the Notifications