குமரியில் வெங்கடாஜலபதி கோயில்: பூமி பூஜை விழாவில் பக்தர்கள் பங்கேற்பு
கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் திருப்பதி தேவஸ்தானம் சார்பில் கட்டப்பட உள்ள வெங்கடாஜலபதி ஆலயத்திற்கான பூமி பூஜை விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
கன்னியாகுமரி விவேகானந்தபுரம் விவேகானந்தா கேந்திரத்தில் 5.5 ஏக்கர் பரப்பில் ரூ.22.5 கோடியில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஸ்ரீவெங்கடாஜலபதி கோயில் கட்டப்படுகிறது. இதற்கான நிலத்தை விவேகானந்த கேந்திரம் நன்கொடையாக வழங்கியுள்ளது.
ஸ்ரீவெங்கடேசப்பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி, கருடாழ்வார் சன்னிதானங்களுடன், கோசாலை, வேதபாடசாலை, புஷ்கரணி, திருமண மண்டபம் போன்ற எல்லா வசதிகளோடு இங்கு ஆலயம் அமைக்கப்பட உள்ளது. இந்த கோயிலில் தெப்பக்குளம் மற்றும் முடி காணிக்கை செலுத்தும் வசதியும் அமைக்கப்படுகின்றது. மேலும், திருப்பதி கோயிலைப் போலவே தெப்பத்திருவிழா உள்பட அனைத்து விழாக்களும் நடத்தப்படும்.
திருப்பதி வெங்கடாஜலபதி கோயில் கட்டப்படும் இடத்தை திருப்பதிபுரம் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இக் கோயில் 2 ஆண்டுகளில் கட்டிமுடிக்க திருப்பதி தேவஸ்தானம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.
இதற்கான பூமி பூஜை நேற்று காலை 5.30 மணிக்கு கோமாதா பூஜையுடன் தொடங்கியது. பின்பு, கணபதிஹோமம், வாஸ்துபூஜை நடந்தது. 6.37 மணிக்கு பூமி பூஜை நடந்தது. நவரத்தினம், பஞ்ச உலோகம், நவதானியம் ஆகியவை பூமியில் வைத்து திருப்பதி தேவஸ்தானத்தில் இருந்து வந்த ஆச்சாரியார்கள் பூஜை நடத்தினர்.

பூஜையில், திருப்பதி தேவஸ்தான சேர்மன் ஸ்ரீகணுமுரு பாபிராஜி எம்.பி., திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி சுப்பிரமணியம், சென்னை திருமலை திருப்பதி தேவஸ்தான சென்னை ஆலோசனை குழுமம் தலைவர் அனந்தகுமார் ரெட்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பூமி பூஜை நடந்த இடத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நவதானியம், பூக்கள் போட்டு வணங்கினர். பூஜைக்கு வந்த பக்தர்களுக்கு லட்டு, கயிறு போன்றவை பிரசாதமாக வழங்கப்பட்டது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications