Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எங்களுக்கும் ஓட்டுப் போட ரைட்ஸ் உண்டு.. சொல்கிறார் தேமுதிக சந்திரகுமார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சட்டசபையிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டாலும் தேமுதிக எம்.எல்.ஏக்களுக்கு ராஜ்யசபா தேர்தலில் வாக்களிக்க முழு உரிமை உள்ளது என்று கூறியுள்ளார் தேமுதிக கொறடா வி.சி.சந்திரகுமார்.

தமிழகத்தில் காலியாகும் 6 ராஜ்யசபா எம்.பிக்களுக்குப் பதில் புதிய எம்.பிக்களைத் தேர்வு செய்ய ஜூன் 27ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் ஆளும் கட்சியான அதிமுக சார்பில் 4 எம்.பிக்கள் தேர்வு செய்யலாம். அதிமுகவின் ஆதரவுடன் தோழமைக் கட்சி சார்பில் ஒருவரைத் தேர்வு செய்யலாம். இன்னொரு இடத்தை எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பெற முடியும். அதாவது திமுகவும், தேமுதிகவும் சேர்ந்து சந்தித்து வெல்லலாம்.

ஆனால் இதில் சிக்கல் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது. தேமுதிகவில் பெரும் கலகத்தை ஏற்படுத்தி வி்ட்டனர். அக்கட்சிக்கு 29 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். இதில் 6 பேர் அதிமுகவுக்கு ஆதரவாக திரும்பியுள்ளனர். 6 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

சஸ்பெண்ட் செய்யப்பட்டவர்கள் வாக்களிக்க முடியாது என்று ஒரு பேச்சு அடிபடுகிறது. ஆனால் சஸ்பெண்ட் செய்யப்பட்டவர்களும் வாக்களிக்கலாம் என்று தேமுதிக கொறடா வி.சி.சந்திரகுமார் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ராஜ்யசபா தேர்தலில் எங்களுக்கு ஓட்டு போட உரிமை உண்டு. ஆனால் சட்டசபை வளாகத்துக்கு செல்ல எங்களுக்கு அனுமதி கிடைக்குமா என்பதை தேர்தல் கமிஷன்தான் விளக்க வேண்டும்.

ஏற்கனவே 2010ல் மகாராஷ்டிரா மாநிலத்தில் இதுபோன்ற ஒரு நிலை வந்தது. அப்போது சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்எல்ஏக்களை ஓட்டு போட அனுமதிக்கலாம் என்று மகாராஷ்டிர மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், சட்டசபையில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட 6 எம்எல்ஏக்களை ஓட்டு போட செய்வதற்கு சட்டசபையை கூட்டி தீர்மானம் போட வேண்டும் என்று அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இதனால், சஸ்பெண்ட் எம்எல்ஏக்கள் சட்டமன்ற வளாகத்திற்கு சென்று ஓட்டு போடாத நிலை ஏற்பட்டது. அதுபோன்ற ஒரு நிலையை இங்கு ஏற்படுத்தவே அதிமுக அரசு நினைக்கும்.

மேலும் இதுதொடர்பாக வழக்கு உயர்நீதிமன்றத்தில் உள்ளது. எனவே தேர்தலில் எங்கள் நிலை என்ன என்பதை எங்கள் கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவிப்பார் என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+