சரி விடுங்க, லாலு ஜெயிச்சுட்டார், அவ்வளவுதான்.. நிதீஷ் ஒப்புதல்

பீகார் மாநிலம் மகாராஜ்கன்ச் லோக்சபா இடைத் தேர்தலில் நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம் பெரும் தோல்வியைச் சந்தித்து நிதீஷை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தத் தேர்தலில் நிதீஷின் அரசியல் எதிரியான லாலு பிரசாத் யாதவின் கட்சி பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது.
இதுகுறித்து இன்று கருத்து தெரிவித்துள்ளார் நிதீஷ். அவர் கூறுகையில், மிகவும் அடக்கமாக, அமைதியாக, லாலு பிரசாத்யாதவ் வென்று விட்டார் என்பதை ஒப்புக் கொள்கிறேன் என்றார் நிதீஷ். வேறு கருத்தை அவர் தெரிவிக்கவில்லை.
நிதீஷ் கட்சியின் தோல்விக்கு நிதீஷின் அரசியல் அராஜகம்தான் காரணம் என பாஜகவினர் கூறுகிறார்கள். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ஆட்சிக்கு வந்த பின்னர் கூட்டணிக் கட்சியான பாஜகவை மதிப்பதில்லை நிதீஷ். பிரசாரத்துக்குக் கூட பாஜக தலைவர்களை அவர் முறைப்படி கூப்பிடவில்லை. இந்த அராஜகப் போக்குதான் அவரது கட்சியின் படு தோல்விக்குக் காரணம் என்றனர் அவர்கள்.
அதேசமயம், மகாராஜ்கன்ச் தொகுதி எப்போதும் லாலு கட்சிக்கு ஆதரவானது என்பதையும் நிதீஷ் குமார் சுட்டிக் காட்டத் தவறவில்லை.இதுகுறித்து அவர் கூறுகையில், அந்தத் தொகுதியில் எம்.பியாக இருந்தவர் எங்களது கட்சியைச் சேர்ந்தவரில்லை. அவர் லாலு கட்சியைச் சேர்ந்தவர் என்பதை யாரும் மறந்து விடக் கூடாது என்றார் நிதீஷ்.
மேலும் அவர்கூறுகையில், இந்த தோல்வியால் பாஜகவுடனான உறவிலோ, அல்லது கூட்டணியிலோ பாதிப்பு ஏதும் வராது, தாக்கத்தை ஏற்படுத்தாது என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications