ஆமாம், ஐபிஎல் போட்டிகளின்போது பெட்டிங் கட்டினேன்: ராஜ் குந்த்ரா ஒப்புதல்

ஐபிஎல் ஸ்பாட் பிக்ஸிங் தொடர்பாக பாலிவுட் நடிகையும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி உரிமையாளருமான ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா மற்றும் அவரது வியாபார பார்ட்னரும், நண்பருமான உமேஷ் கோயன்கா ஆகியோரை டெல்லி போலீசார் நேற்று சுமார் 12 மணிநேரம் விசாரித்தனர். அப்போது அவர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாடிய போட்டிகளின்போது பெட் கட்டியதை ஒப்புக் கொண்டுள்ளார் என்று டெல்லி போலீசார் தெரிவித்தனர். அவர் பெட் கட்டி ஏகப்பட்ட பணத்தை இழந்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவர் தனது நண்பரும், தரகருமான உமேஷ் மூலம் பெட்டிங்கில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
குந்த்ராவுக்கு ராஜஸ்தான் அணியில் 11.7 சதவீத பங்குகள் உள்ளது. அவர் பிக்ஸிங்கில் அல்ல பெட்டிங்கில் தான் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு உள்ளது என்று போலீசார் தெரிவித்தனர். இந்நிலையில் அவர்கள் இருவரிடமும் இன்றும் விசாரணை நடத்தப்படும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் குந்த்ராவின் பாஸ்போர்ட் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர் கைது செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
முன்னதாக பெட்டிங் தொடர்பாக கைது செய்யப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சிஇஓ குருநாத் மெய்யப்பன், நடிகர் வின்து தாரா சிங் உள்ளிட்டோர் நேற்று முன்தினம் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications