நடிகை ஜியா கான் மரணத்தால் அதிர்ச்சி அடைந்த 5ம் வகுப்பு மாணவர் தூக்கு போட்டு தற்கொலை
ஜெய்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் பாலிவுட் நடிகை ஜியா கான் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சியில் 12 வயது மாணவர் ஒருவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீகங்கா நகர் மாவட்டத்தில் உள்ள குருநானக் பஸ்தியைச் சேர்ந்தவர் பாபு(12). அப்பகுதியில் உள்ள பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்தார். அவர் கடந்த திங்கட்கிழமை இரவு மும்பையில் உள்ள தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட பாலிவுட் நடிகை ஜியா கானின் மரண செய்தியை செவ்வாய்கிழமை திரும்பத் திரும்ப டிவியில் பார்த்துள்ளார்.

இதையடுத்து அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரம் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஜியா கான் மரணச் செய்தியைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர் தற்கொலை செய்து கொண்டார் என்று போலீசார் தெரிவித்தனர்.
ஜியா கான் மரணம் அவரை வெகுவாக பாதித்ததால் தான் பாபுவும் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரது குடும்பத்தார் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications